மோசமான சூழலை உருவாக்கும் மத்திய அரசு: நூபுர் சர்மா விவகாரத்தில் ராகுல் தாக்கு

நாட்டில் மிக மோசமான வெறுப்புச் சூழலை மத்திய அரசு உருவாக்கி வருவதாக, நூபுர் சர்மாவுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருப்பது குறித்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கருத்துக் கூறியிருக்கிறார்.

பாஜக தலைமையிலான மத்திய அரசு, நாட்டின் சூழலை ஆத்திரம் மற்றும் வெறுப்பு நிறைந்ததாக உருவாக்கி வருவதாகவும், இது நாட்டுக்கும், நாட்டு மக்களின் நலனுக்கும் எதிரானது என்றும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்திருந்த நூபுர் சர்மாவுக்கு எதிராக, உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்த கடும் கண்டனம் குறித்து செய்தியாளர்கள் ராகுல் காந்தியிடம் கேட்டபோது, உச்ச நீதிமன்றம் கூறியிருப்பது முற்றிலும் உண்மை. ஆனால், நாட்டில் தற்போது உருவாகியிருக்கும் சூழல், சர்ச்சைக்குரிய கருத்துக் கூறிய அந்த ஒரு நபரால் உருவானதல்ல, தேசிய ஜனநாயகக் கூட்டணியால் நடத்தப்படும் மத்திய அரசு உருவாக்கி வருகிறது என்றார்.

அது பிரதமர், உள்துறை அமைச்சர் மற்றும் பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்புகள் மூலமாக மோசமான சூழல் உருவாக்கப்படுகிறது. இந்த மோசமான சூழல் என்பது கோபம் மற்றும் வெறுப்புச் சமூகமாக உள்ளது என்றும் கூறினார் ராகுல்.

வெளிப்படையாகக் கூறுவது என்றால், இப்படி ஒரு மோசமான சூழ்நிலையை உருவாக்குவது தேசத்துக்கு விரோதமான செயல் என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம் வயநாடு சென்று, கடந்த வாரம் அடித்து நொறுக்கப்பட்ட தனது அலுவலகத்தைப் பார்வையிட்டபிறகு செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி இவ்வாறு கூறினார்.
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com