பிரதமர் யார் மீது அக்கறை காட்டுகிறார் என்பதை மிகுந்த வலியுடன் நினைவூட்டுவதே ஜிஎஸ்டி என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடுமையாக விமரிசித்துள்ளார்.
நாடு முழுவதும் பொருள்களுக்கு ஒரே வரியாக சரக்கு மற்றும் சேவை வரி(ஜிஎஸ்டி)யை மத்திய அரசு கடந்த 2017ல் அறிமுகப்படுத்தியது. கடந்த ஜூலை 1 ஆம் தேதியுடன் 5 ஆண்டுகளை ஜிஎஸ்டி நிறைவு செய்த நிலையில், மத்திய பாஜக அரசு அதனைக் கொண்டாடி வருகிறது.
இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஜிஎஸ்டி குறித்து மத்திய அரசை கடுமையாக விமரிசித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,
'மருத்துவக் காப்பீடு மீதான ஜிஎஸ்டி: 18%
மருத்துவமனை அறை மீதான ஜிஎஸ்டி: 5%
வைரங்கள் மீதான ஜிஎஸ்டி: 1.5%
பிரதமர் யார் மீது அக்கறை காட்டுகிறார் என்பதை மிகுந்த வலியுடன் நினைவூட்டுவதே ஜிஎஸ்டி எனும் கப்பர் சிங் வரி(Gabbar Singh Tax).
ஒற்றை மற்றும் குறைந்த ஜிஎஸ்டி விகிதமே இணக்கச் செலவுகளைக் குறைக்கும், அரசு தனக்கு பிடித்தவற்றில் விளையாடுவதைத் தடுக்கும், ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களின் சுமையை எளிதாக்கும்' என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க | 5 ஆண்டுகளை நிறைவு செய்தது ஜிஎஸ்டி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிட்ட சிவகார்த்திகேயன்!

வேட்டி, சட்டையுடன் திருச்சி வந்தார் பிரதமர் மோடி!

லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! அதிகரிக்கும் உயிர்ப் பலி!

எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்? பணம் திருப்பியளிக்கத் திட்டம்?
வீடியோக்கள்

ஈரான் போரால் இந்தியாவில் பாதிப்பு | Iran Israel war | America | Dr Ramasubramanian | Dinamani
தினமணி வீடியோ செய்தி...

AI வருகையால் பாடகர்களுக்கு அச்சுறுத்தல்?: Singer காவ்யா அஜித் பேட்டி | Kavya Ajit | Exclusive |
தினமணி வீடியோ செய்தி...

இளம் வயதில் அரசியலுக்கு வந்தது ஏன்?: மனம் திறந்த மைதிலி தாக்குர் | Maithili Thakur |
தினமணி வீடியோ செய்தி...

சென்னை வந்தடைந்த அஜித்குமார்!
தினமணி வீடியோ செய்தி...

