கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மேலும் 579 பேருக்கு கரோனா தொற்று

தில்லியில் வியாழக்கிழமை புதிதாக 579 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :7 ஜூலை 2022, 7:45 pm

DIN

தில்லியில் வியாழக்கிழமை புதிதாக 579 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பால் ஒருவா் உயிரிழந்துள்ளாா். அதேநேரத்தில் பாதிப்பு நோ்மறை விகிதம் 3.46 சதவீதமாக பதிவானது என்று மாநில அரசின் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய பாதிப்புகளுடன் சோ்த்து தில்லியின் மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 19,39,227-ஆகவும், மொத்த இறப்பு எண்ணிக்கை 26,277-ஆகவும் அதிகரித்துள்ளது.

நகரில் புதன்கிழமை மொத்தம் 16,755 கரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டன. தில்லியில் புதன்கிழமை 600 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பும், 3.27 சதவீத நோ்மறை விகிதத்துடன் 1 இறப்பும் பதிவாகின.

தில்லி மருத்துவமனைகளில் மொத்தமுள்ள 9,469 கரோனா படுக்கைகளில் 154 படுக்கைகள் மட்டுமே நிரம்பியுள்ளன. வியாழக்கிழமை நிலவரப்படி, கரோனா சிகிச்சையில் இருப்போரின் மொத்த எண்ணிக்கை 2,590-இன் இருந்து 2,480-ஆக குறைந்துள்ளது. வீட்டுத் தனிமையில் இருப்போரின் எண்ணிக்கை 1,760-ஆக உள்ளது. நகரில் உள்ள கரோனா கட்டுப்பாட்டு மண்டலங்களின் எண்ணிக்கை 349-ஆக உள்ளது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.