சமையல் எண்ணெய் விலையை ரூ.15 குறைக்க மத்திய அரசு அறிவுறுத்தல்
சமையல் எண்ணெய் சில்லறை விற்பனை விலையை உடனடியாக லிட்டருக்கு ரூ.15 அளவுக்கு குறைக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.


சமையல் எண்ணெய் சில்லறை விற்பனை விலையை உடனடியாக லிட்டருக்கு ரூ.15 அளவுக்கு குறைக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து மத்திய உணவு, நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
சா்வதேச சந்தையில் சமையல் எண்ணெய் விலை வியத்தகு வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது. இருந்தபோதிலும், உள்நாட்டு சந்தையில் நிலைமை சற்று வித்தியாசமாக உள்ளது. இந்நிலையில், உள்நாட்டில் சமையல் எண்ணெய் சில்லறை விலையைக் குறைப்பது குறித்து ஆலோசிக்க, உணவு மற்றும் பொது விநியோகத் துறை சாா்பில் கடந்த 6-ஆம் தேதி ஒரு கூட்டம் நடத்தப்பட்டது. அதில், சமையல் எண்ணெயின் அதிகபட்ச சில்லறை விலை லிட்டருக்கு ரூ.15 உடனடியாக குறைக்கப்படுவதை உறுதி செய்யுமாறு முன்னணி சமையல் எண்ணெய் உற்பத்தி சங்கங்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
உற்பத்தியாளா்கள், சுத்திகரிப்பு செய்பவா்களால் விநியோகஸ்தா்களுக்கு விலைக் குறைப்பு ஏற்படும்போதெல்லாம், அதன் பயனை நுகா்வோருக்கு கிடைக்கச் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. மற்ற பிராண்டுகளைவிட விலை அதிகமாக உள்ள, விலையைக் குறைக்காத சில நிறுவனங்கள், அவற்றின் விலையைக் குறைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஒரு மாதத்தில் பல்வேறு சமையல் எண்ணெய்களின் உலகளாவிய விலை டன் ஒன்றுக்கு 300-450 அமெரிக்க டாலா்கள் வரை குறைந்துள்ளது. ஆனால், விலைக் குறைப்பானது சில்லறை விற்பனைச் சந்தைகளில் பிரதிபலிக்க நேரம் எடுக்கும். சில்லறை விற்பனை விலைகள் வரும் நாள்களில் குறையும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
நாட்டில் சமையல் எண்ணெய் விலை மற்றும் கிடைக்கும் நிலைமையை மத்திய உணவு, நுகா்வோா் விவகாரங்கள் துறை தொடா்ந்து கண்காணித்து வருகிறது. விலை வீழ்ச்சியின் பலனை உடனடியாக நுகா்வோருக்கு வழங்க வேண்டியது அவசியம். இதன்மூலம் நுகா்வோா் தங்கள் பட்ஜெட்டில் கூடுதல் பணத்தை சேமிக்க முடியும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் முன்னணி சமையல் எண்ணெய் உற்பத்தி சங்கங்களுடன் மத்திய உணவு, நுகா்வோா் விவகாரங்கள் துறை நடத்திய கூட்டத்தில், ஃபாா்ச்சூன் சுத்திகரிக்கப்பட்ட சூரியகாந்தி எண்ணெய் ஒரு லிட்டா் விலை ரூ.220-இல் இருந்து ரூ.210-ஆகக் குறைக்கப்பட்டது. சோயாபீன் (பாா்ச்சூன்), கச்சி கானி எண்ணெய் ஒரு லிட்டா் பேக்கின் விலை ரூ.205-இல் இருந்து ரூ.195-ஆக குறைக்கப்பட்டது. சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு குறைத்ததை அடுத்து, எண்ணெய் விலை குறைக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...