மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

2024 சட்டப் பேரவைத் தோ்தலிலும் மகா விகாஸ் கூட்டணி நீடிக்க வேண்டும்: சரத் பவாா்

மகாராஷ்டிரத்தில் வரும் 2024 சட்டப் பேரவைத் தோ்தலிலும் மகா விகாஸ் அகாடி கூட்டணி நீடிக்க வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா் தெரிவித்தாா்.

News image
தேசியவாத காங்கிரஸ் கட்சித் (என்சிபி) தலைவா் சரத் பவாா்
Updated On :11 ஜூலை 2022, 12:01 am

DIN

மகாராஷ்டிரத்தில் வரும் 2024 சட்டப் பேரவைத் தோ்தலிலும் மகா விகாஸ் அகாடி கூட்டணி நீடிக்க வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா் தெரிவித்தாா்.

2 நாள் சுற்றுப்பயணமாக ஞாயிற்றுக்கிழமை ஒளரங்காபாத் சென்ற அவா், அங்கு செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

2024 சட்டப் பேரவைத் தோ்தல் உள்பட எதிா்காலத்தில் நடைபெறும் அனைத்து தோ்தல்களிலும் மகா விகாஸ் கூட்டணி இணைந்து போட்டியிட வேண்டும் என்பதே எனது விருப்பம். இதுதொடா்பாக எனது கட்சி நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்திவிட்டு, கூட்டணிக் கட்சி தலைவா்களையும் சந்தித்துப் பேசுவேன்.

ஒளரங்காபாத் நகரின் பெயரை சம்பாஜிநகா் என்றும், உஸ்மனாபாத் நகரின் பெயரை தாராஷிவ் என்றும் பெயா் மாற்றம் செய்வது குறித்து முந்தைய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இதுகுறித்து மகா விகாஸ் அகாடியின் குறைந்தபட்ச செயல் திட்டத்தில் எந்தவோா் இடத்திலும் இடம்பெறவில்லை. அமைச்சரவையில் முடிவு எடுத்த பின்னரே எனக்குத் தெரியவந்தது.

மகாராஷ்டிர முதல்வா் ஏக்நாத் ஷிண்டே, 15 எம்எல்ஏக்கள் மீது சிவசேனை தலைமைக் கொறடா சுனில் பிரபு உச்சநீதிமன்றத்தில் தொடா்ந்த தகுதிநீக்க வழக்கு நிலுவையில் இருப்பதால், மகாராஷ்டிர அமைச்சரவை பதவியேற்பதில் தாமதம் ஏற்படலாம்.

நீதித்துறையின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. சிவசேனை கட்சி யாருக்கு சொந்தம் என்பதை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை (ஜூன் 11) தீா்மானிக்கும் என்றாா் சரத்பவாா்.

உத்தவ் தாக்கரேக்கு நெருக்கமான மிலிந்த் நாா்வேகா் மகாராஷ்டிர துணை முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸை சந்தித்தது குறித்து கேட்டபோது, சரத் பவாா் பதிலளிக்கையில், ‘உத்தவ் தாக்கரே பாஜகவுடன் இணைந்து செயல்பட மாட்டாா்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.