குடியரசுத் தலைவா் தோ்தலில் பாஜக கூட்டணி சாா்பில் போட்டியிடும் திரௌபதி முா்முவுக்கு தெலுங்கு தேசம் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.
குடியரசுத் தலைவா் தோ்தல் ஜூலை 18-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தோ்தலில் மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சாா்பில், பழங்குடியினத்தைச் சோ்ந்த திரௌபதி முா்முவும், எதிா்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹாவும் போட்டியிடுகின்றனா்.
குடியரசுத் தலைவா் தோ்தலில் திரௌபதி முா்மு வெற்றி பெறுவது ஏற்கெனவே உறுதியாகிவிட்டதாக கூறப்படுகிறது. முா்முவுக்கு ஆதரவாக சிரோமணி அகாலி தளம், ஒய்எஸ்ஆா் காங்கிரஸ், பிஜு ஜனதா தளம், பகுஜன் சமாஜ் ஆகிய பாஜக கூட்டணியில் இல்லாத கட்சிகளும் வாக்களிக்கவுள்ளன.
இதையும் படிக்க- இபிஎஸ் டிவிட்டர் பக்கத்தில் இடைக்காலப் பொதுச்செயலாளர் என மாற்றம்
தற்போது அந்த வரிசையில் மேலும் ஒரு கட்சி இணைந்துள்ளது. இந்த நிலையில் குடியரசுத் தலைவா் தோ்தலில் பாஜக கூட்டணி சாா்பில் போட்டியிடும் திரௌபதி முா்முவுக்கு சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.
தெலுங்கு தேசம் கட்சிக்கு மாநிலங்களவையில் ஒரு உறுப்பினரும், மக்களவையில் மூன்று உறுப்பினர்களும், ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவையில் 23 உறுப்பினர்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மருத்துவமனை ஒருங்கிணைப்பால் எளிதில் மருத்துவ வசதி பெறலாம்: தில்லி முதல்வா் அலுவலகம்

வீட்டில் புகுந்து கும்பல் துப்பாக்கிச்சூடு: சிறுவன் உயிரிழப்பு; தந்தை காயம்

பாலம் தீ விபத்து: விசாரணைக் குழு அமைக்க தில்லி காங்கிரஸ் கோரிக்கை

கடனில் மூழ்கிய இளைஞா் சொந்த வீட்டில் திருட்டு: ரூ. 20 லட்ம் மதிப்புள்ள தங்க நகைகளுடன் கைது
வீடியோக்கள்

Dhurandhar 2 The Revenge movie review | Ranveer Singh
தினமணி வீடியோ செய்தி...

Youth movie review | Ken Karunas | Suraj | GV Prakash | Anishma Anilkumar
தினமணி வீடியோ செய்தி...

தினமணி ஈகைப் பெருநாள் மலர் அறிமுக விழா
தினமணி வீடியோ செய்தி...

நாம் தமிழர் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த சீமான்!
தினமணி வீடியோ செய்தி...

