நுழைவு இசைவு (விசா) முறைகேடு வழக்கில் எம்.பி. காா்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை ஆகஸ்ட் 18-ஆம் தேதிக்கு தில்லி உயா்நீதிமன்றம் ஒத்திவைத்தது.
காங்கிரஸ் மூத்த தலைவா் ப.சிதம்பரம் கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் உள்துறை அமைச்சராக பதவி வகித்தாா். அப்போது அவரது செல்வாக்கைப் பயன்படுத்தி, சீனத் தொழிலாளா்கள் 263 பேருக்கு காா்த்தி சிதம்பரம் முறைகேடாக நுழைவு இசைவு பெற்றுக் கொடுத்ததாகவும், இதற்காக ரூ.50 லட்சம் அளிக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த வழக்கை அமலாக்கத் துறையினா் விசாரித்து வருகின்றனா். இந்நிலையில், இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் கோரி தில்லி உயா்நீதிமன்றத்தில் காா்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த மனு செவ்வாய்க்கிழமை நீதிபதி பூனம் ஏ.பம்பா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது அமலாக்கத் துறை சாா்பில் ஆஜரான வழக்குரைஞா், கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் எஸ்.வி.ராஜு தற்போது ஆஜராக முடியாததால், விசாரணையை ஒத்திவைக்குமாறு கேட்டுக்கொண்டாா். இதை பரிசீலித்த நீதிபதி, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஆகஸ்ட் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா். அதுவரை எம்.பி.காா்த்தி சிதம்பரம் மீது கடும் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படாது என அமலாக்கத் துறையினா் வாய்மொழியாக நீதிபதியிடம் உறுதியளித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

Podcast | தொகுதி உடன்பாட்டில் சிக்கல்: முடிவு எப்போது? | News and Views | Epi - 15 |

92,700 மெட்ரிக் டன் எல்பிஜி! ஒன்றரை நாள் தேவையை மட்டுமே பூர்த்தி செய்யும்!
சூர்யாவின் கருப்பு பட வெளியீட்டுத் தேதி!
யோகி பாபுவின் 300 ஆவது படம்! அர்ஜுனன் பேர் பத்து டீசர்!
வீடியோக்கள்

Podcast | தொகுதி உடன்பாட்டில் சிக்கல்: முடிவு எப்போது? | News and Views | Epi - 15 |
தினமணி வீடியோ செய்தி...

'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே' அதிரடி டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

Podcast | மௌனம் கலைப்பாரா விஜய்? | News and Views | Epi - 14 |
தினமணி வீடியோ செய்தி...

தொகுதி பங்கீட்டில் வருத்தமா? கலைஞருக்கு நான் கொடுத்த வாக்கு! வைகோ பேட்டி | DMK | MDMK
தினமணி வீடியோ செய்தி...

