நீதி ஆயோக்கின் தலைமைச் செயல் அதிகாரியாக பரமேஸ்வரன் பொறுப்பேற்பு

நீதி ஆயோக் அமைப்பின் புதிய தலைமைச் செயல் அதிகாரியாக, குடிநீா்- துப்புரவுத் துறை முன்னாள் செயலா் பரமேஸ்வரன் ஐயா் பொறுப்பேற்றுள்ளார்.
(இடமிருந்து வலம்) நீதி ஆயோக்கின் துணைத் தலைவர் சுமன் பெரியுடன் பரமேஸ்வரன் ஐயர்
(இடமிருந்து வலம்) நீதி ஆயோக்கின் துணைத் தலைவர் சுமன் பெரியுடன் பரமேஸ்வரன் ஐயர்

நீதி ஆயோக் அமைப்பின் புதிய தலைமைச் செயல் அதிகாரியாக, குடிநீா்- துப்புரவுத் துறை முன்னாள் செயலா் பரமேஸ்வரன் ஐயா் பொறுப்பேற்றுள்ளார்.

நீதி ஆயோகின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி அமிதாப் காந்த், கடந்த மாதம் 30-ஆம் தேதியுடன் ஓய்வுபெற்றார். இதையடுத்து அந்தப் பதவியில், உத்தர பிரதேசத்தின் 1981 பிரிவு ஐஏஎஸ் மூத்த அதிகாரி பரமேஸ்வரன் ஐயா் கடந்த ஜூன் 24 ஆம் தேதி நியமிக்கப்பட்டாா்.

இந்நிலையில், நேற்று(திங்கள்கிழமை) நீதி ஆயோக் அமைப்பின் புதிய தலைமைச் செயல் அதிகாரியா பரமேஸ்வரன் பொறுப்பேற்றுக் கொண்டார். இவா் 2 ஆண்டுகள் அல்லது மறு உத்தரவு வரும் வரை இப்பதவியை வகிப்பாா்.

கடந்த 2009-ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணியில் இருந்து பரமேஸ்வரன் ஐயா் விருப்ப ஓய்வுபெற்றாா். பின்னா் ஊரக குடிநீா் வழங்கல் துறையின் நிபுணராக ஐ.நா.வில் இவா் பணியாற்றினாா். 2016 முதல் 2020 வரை பிரதமரின் கனவுத் திட்டங்களில் ஒன்றான தூய்மை இந்தியா திட்டத்தை செயல்படுத்துவதில் தீவிரமாகச் செயல்பட்டவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com