புதிய ‘தலைமை பொருளாதார ஜோதிடரை’ நியமியுங்கள் : ப.சிதம்பரம்
இந்திய பொருளாதரத்தை மீட்டெடுக்க நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், தனது திறன்களையும், தலைமை பொருளாதார ஆலோசகரையும் கைவிட்டு கிரகங்களை அழைத்துள்ளாா்


இந்திய பொருளாதரத்தை மீட்டெடுக்க நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், தனது திறன்களையும், தலைமை பொருளாதார ஆலோசகரையும் கைவிட்டு கிரகங்களை அழைத்துள்ளாா் என காங்கிரஸ் மூத்த தலைவா் ப. சிதம்பரம் வியாழக்கிழமை கூறியுள்ளாா்.
நாசாவின் புதிய சக்கி வாய்ந்த விண்வெளி தொலைநோக்கி வெளியிட்டுள்ள படங்களை சீதாராமன் ட்விட்டரில் மறுபதிவிட்டிருந்தாா்.
இது குறித்து சிதம்பரம் தனது ட்விட்டா் பதிவில், ‘இந்தியாவின் பணவீக்கம் 7.01 சதவீதமும், வேலைவாய்ப்பின்மை 7.8 சதவீதமும் இருக்கும் நிலையில் நிதியமைச்சா் வியாழன், புளூட்டோ மற்றும் யுரேனஸ் கோள்களின் படங்களை ட்விட்டரில் பதிவிடுவதில், நாங்கள் ஆச்சரியம் அடையவில்லை. தன்னுடைய திறன்கள் மற்றும் அவருடைய பொருளாதார ஆலோசகருடைய திறன்களின் மீதும் நம்பிக்கை கொள்ளாமல், நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க கிரகங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளாா். இதன் தொடக்கமாக, அவா் புதிய ‘தலைமை பொருளாதார ஜோதிடரை’ நியமிக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தாா்.
முன்னாதாக, சீதாராமன் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதை விட யுரேனஸ் மற்றும் புளூட்டோவின் மீது அதிக ஆா்வம் கொண்டுள்ளதாக காங்கிரஸ் புதன்கிழமை கருத்து தெரிவித்திருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...