வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

மதக்கலவரத்தில் பாதித்தோரை பார்க்கச் சென்ற சித்தராமையாவுக்கு தர்மசங்கடம்: வைரலாகும் விடியோ

மதக் கலவரத்தில் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரைப் பார்க்கச் சென்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் சித்தராமையாவுக்கு தர்மசங்கடமான நிலைமை உருவானது.

News image
மதக்கலவரத்தில் பாதித்தோரை பார்க்கச் சென்ற சித்தராமையாவுக்கு தர்மசங்கடம்: வைரலாகும் விடியோ
Updated On :15 ஜூலை 2022, 11:01 am

DIN


பாகல்கோட்: மதக் கலவரத்தில் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரைப் பார்க்கச் சென்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் சித்தராமையாவுக்கு தர்மசங்கடமான நிலைமை உருவானது.

கர்நாடக மாநலிம் பாகல்கோர் மாவட்டம் பதாமி தொகுதி எம்எல்ஏவாக இருக்கும் சித்தராமையா, தனது தொகுதியில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தார்.

மதக்கலவரத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்களை நேரில் பார்த்து நலம் விசாரித்த சித்தராமையா, மதக்கலவரத்தில் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்துக்கு நிவாரணத் தொகையாக ரூ.2 லட்சத்தை அளித்தார். ஆனால், அவர்கள் பணத்தைப் பெற்றுக் கொள்ளாமல், அதனை சித்தராமையாவின் வாகனம் செல்லும் போது அதன் மீது தூக்கி எறிந்த காட்சி வைரலாகியுள்ளது.

மதக் கலவரத்தில் பாதிக்கப்பட்டது சிறுபான்மையினர். அவர்களைப் பார்க்க மருத்துவமனைக்கு வந்த சித்தராமையா, அவர்களது குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணத் தொகை அளிக்க முன் வந்தார். ஆனால் அவர்களோ பணம் வேண்டாம், சட்டம் ஒழுங்கு சீரடைந்தால் போதும் என்று கூறிவிட்டனர். அப்போது ராஜ்மா என்ற பெண், பணத்தைக் கையில் பெற்றுக் கொண்டு, எங்களுக்கு பணம் தேவையில்லை, அமைதிதான் வேண்டும் என்று கூறினார். காரில் அமர்ந்தவாறு சித்தராமையா, அப்பெண்ணின் கையை பிடித்துக் கொண்டு சமாதானம் செய்ய முயன்றும், அவர் பணம் வேண்டாம் என்று கூறி, வாகனத்தின் பின்னால் வீசி எறிந்தார்.

இதே மதக்கலவரத்தில் காயமடைந்த ஹிந்து இளைஞர்கள் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அவர்கள் சித்தராமையாவை சந்திக்க மறுத்துவிட்டனர். அவர்களை சந்திக்க சித்தராமையா முயன்றும், கடைசி நேரத்தில் சந்திப்பு ரத்து செய்யப்பட்டது.

கடந்த 6ஆம் தேதி கர்நாடக மாநிலம் கெரூர் பகுதியில், பெண்ணை கிண்டல் செய்தவரைத் தட்டிக் கேட்டபோது ஏற்பட்ட மதக்கலவரத்தில் பலர் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.