மத உணர்வுகளைத் தூண்டும் விதமாக கருத்து பதிவிட்டதற்காக கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர் முகம்மது சுபைருக்கு தில்லி நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது.
மத உணர்வுகளைத் தூண்டும் விதமாக கடந்த 2018ல் ட்விட்டரில் கருத்து பதிவிட்டதற்காக தனியார் பத்திரிக்கை நிறுவனரும் பத்திரிகையாளருமான முகம்மது சுபைர் கடந்த ஜூன் 27 ஆம் தேதி தில்லி காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.
பத்திரிகையாளர் கைது செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து தில்லி நீதிமன்றம் இன்று அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. ரூ. 50,000 வைப்புத்தொகை மற்றும் நீதிமன்றத்தின் அனுமதியின்றி வெளிநாடு செல்லக்கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தனக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக்கோரி முகம்மது சுபைர் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கிலும் அவருக்கு இடைக்கால ஜாமீன் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | இணையதள செய்தியாளா் முகமது சுபைருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஈரான் கச்சா எண்ணெய் விநியோகத்துக்கு அனுமதி: அமெரிக்கா
கடலூர் ஆயங்குடியில் ரமலான் சிறப்புத் தொழுகை!
புதுக்கோட்டையில் ஈகைப் பெருநாள் சிறப்புத் தொழுகை!
என்ன சொல்கிறார்? யாரைச் சொல்கிறார் நிவேதா பெத்துராஜ்?
வீடியோக்கள்

வதந்தி - 2 டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

"Amit shah - EPS சந்திப்பின் பின்னணி இதுதான்”: விவரிக்கும் பத்திரிகையாளர் Priyan
தினமணி வீடியோ செய்தி...

ப்ளீஸ்..மன்னிச்சிடுங்க..தப்பா பேசிட்டேன் | R Parthiban | C. V. Shanmugam | Aadhav Arjuna | Rajini
தினமணி வீடியோ செய்தி...

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

