மக்களவை தலைவரின் தேநீர் விருந்தில் மோடியுடன் கனிமொழி பங்கேற்பு! இந்தியா கூட்டணி புறக்கணிப்பு!கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம் வாபஸ்!நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நிறைவு! இரு அவைகளிலும் 11 மசோதாக்கள் நிறைவேற்றம்!எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கியது!சென்னையில் தவெக அரசின் முதல் முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கியது!தமிழக மீனவர்கள் 9 பேரை கைது செய்த இலங்கை கடற்படைதில்லி செங்கோட்டை குண்டுவெடிப்புக்கு அல்-கொய்தாவே காரணம்: ஐ.நா.நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு!சென்னை பக்கிங்காம் கால்வாயில் வாட்டர் மெட்ரோ: டெண்டர் வெளியீடு
/

மழைக்கால கூட்டத்தொடர்: மக்களவை நண்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு

நாடளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் மக்களவை உறுப்பினர்கள் தங்களது வாக்கினை பதிவு செய்து வருவதால் நண்பகல் 2 மணி வரை நாடளுமன்றம் ஒத்திவைக்கப் படுவதாக சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.

News image

ஓம் பிர்லா(கோப்புப்படம்)

Updated On :1 பிப்ரவரி 2024, 3:19 pm IST

புது தில்லி: நாடளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் மக்களவை உறுப்பினர்கள் தங்களது வாக்கினை பதிவு செய்து வருவதால் நண்பகல் 2 மணி வரை நாடளுமன்றம் ஒத்திவைக்கப் படுவதாக சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகின்றன. முதல் நாள் கூட்டத்தொடரில் பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சித் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர்.

மழைக்கால கூட்டத்தொடர் இரு அவைகளிலும் இன்று தொடங்கி ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை 18 அமர்வுகளாக நடைபெறவுள்ளன. ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே உள்ளிட்ட மறைந்த தலைவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

கூட்டத்தின் முதல் நாளான இன்று குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகின்றன. பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது வாக்கினை பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், மக்களவை உறுப்பினர்கள் தங்களது வாக்கினை பதிவு செய்து வருவதால் நண்பகல் 2 மணி வரை நாடளுமன்றம் ஒத்திவைக்கப் படுவதாக சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.

மக்களவை மற்றும் மாநிலங்களவையில் முதல் நாள் கூட்டம் தொடங்கியுள்ளன. மாநிலங்களவைத் தலைவரும், குடியரசுத் துணைத் தலைவருமான வெங்கையா நாயுடுவின் பதவிக் காலம் ஆகஸ்ட் மாதத்துடன் முடியவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.