

மத்தியப் பிரதேசத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் நிவாரணம் அறிவித்துள்ளார்.
தார் மற்றும் கர்கோன் மாவட்டங்களை இணைக்கும் பாலத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. தேசிய பேரிடர் மீட்புப் படையின் நான்கு குழுக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், பேருந்து ஆற்றில் இருந்து வெளியே எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், பேருந்து விபத்தில் உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்துக்கும் மாநில அரசு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கும் என்று முதல்வர் சௌகான் அறிவித்தார். மேலும் இறந்தவர்களின் உடல்கள் அவரவர் வீடுகளுக்கு கொண்டு செல்லப்படும் என்றும் அவர் கூறினார்.
தார்-கர்கோன் பகுதியில் கனமழை பெய்துவருவதால், சம்பவம் நடந்தபோது நர்மதா நதியில் தண்ணீர் அபாய அளவை தாண்டி ஓடி வருவதால் மீட்புப் பணி கடினமாகியுள்ளதாக மீட்புக் குழுவினர் தெரிவித்தனர்.
விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாநில அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என்று மகாராஷ்டிர அரசுக்கு உறுதியளித்ததாக சௌகான் கூறினார்.
இதற்கிடையில், மகாராஷ்டிரா அரசு இறந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு தலா ரூ.10 லட்சமும், காயமடைந்தவர்களின் சிகிச்சைக்காக முழு மருத்துவச் செலவையும் அறிவித்துள்ளது.
இதையும் படிக்கலாம்: ம.பி.யில் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்து: 12 பேர் பலி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.