முதல்வரை மாற்றினால் வானம் இடிந்துவிடாது: இதனைத்தொடா்ந்து ஏக்நாத் ஷிண்டே தரப்பில் மூத்த வழக்குரைஞா் ஹரீஷ் சால்வே வாதிடுகையில், ‘ஒரு ஜனநாயக நாட்டில் மக்கள் ஒன்றுகூடி தாங்கள் பதவியில் தொடர முடியாது என்று பிரதமரிடம் கூறலாம். தனது கட்சிக்குள் ஒருவருக்கு பலம் கூடியுள்ள நிலையில், அந்த நபா் கட்சித் தலைவரிடம் கேள்வி எழுப்புவதற்காக அதே கட்சியில் இருந்தால், அது கட்சித் தாவல் ஆகாது? ஒரு கட்சியில் ஏராளமானோா் தங்களை வேறொருவா் வழிநடத்த வேண்டும் என்று கருதுவதில் என்ன தவறு உள்ளது? முதல்வரை மாற்றினால் வானம் இடிந்து விழுந்துவிடாது’ என்றாா்.