பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும்: இபிஎஸ் பரந்தூர் விமான நிலைய அறிவிப்பு! திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புமத்திய பாதுகாப்பு அமைச்சக பெண் அதிகாரி கருவுற்றிருந்த நிலையில் மரணம்! அதிர்ச்சி காரணம்ஓணம் பண்டிகை: சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு கட்டணமில்லா மகளிர் பேருந்து திட்டம் எப்போது? பேரவையில் அறிவித்தார் முதல்வர் விஜய்!பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு

மோசமான வானிலை: அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம்

ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் மோசமான வானிலை காரணமாக அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

Published On :1 பிப்ரவரி 2024, 3:21 pm IST

ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் மோசமான வானிலை காரணமாக அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

ராம்பன் மாவட்டத்தில் பல இடங்களில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகள் மற்றும் கற்கள் காரணமாக மூடப்பட்ட பின்னர் வியாழன் இரவு, நெடுஞ்சாலை ஒருவழிப் போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 

நெடுஞ்சாலையில் நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக ஜம்முவில் அமர்நாத் யாத்திரை நிறுத்தப்பட்டுள்ளது. 

43 நாள் நடைபெறும் அமர்நாத் யாத்திரை ஜூன் 3 அன்று பஹல்காமில் உள்ள நுன்வான் மற்றும் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள பால்தால் முகாமிலிருந்து பக்தர்கள் அமர்நாத் குகைக் கோயிலுக்குப் புறப்பட்டுச் சென்றனர். 

இதுவரை 2.30 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் பனி சிவலிங்கத்தைத் தரிசனம் செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரக்ஷா பந்தன் விழாவையொட்டி ஆகஸ்ட் 11ஆம் தேதி யாத்திரை முடிவடைகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.