ஹைதராபாத்தில் ஐஐஐடிஎம் மாணவி தற்கொலை: காரணம்?

குவாலியரில் உள்ள இந்தியத் தகவல் தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மைக் கழகத்தில் பயிலும் மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
ஹைதராபாத்தில் ஐஐஐடிஎம் மாணவி தற்கொலை: காரணம்?

குவாலியரில் உள்ள இந்தியத் தகவல் தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மைக் கழகத்தில் பயிலும் மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சி.தீனா(23) குவாலியரில் உள்ள ஐஐஐடிஎம்.யில் படித்து வந்தார். இவர் சைதாபாத் பகுதியில் உள்ள நான்கு மாடிக் குடியிருப்பின் மொட்டை மாடியிலிருந்து  குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், 

பிஜி ரெட்டி சைதாபாத் அருகே உள்ள ஆதர்ஷ் ஹைட்ஸ் பகுதியில் தனது பெற்றோருடன் வசித்துவந்த தீனா ஐஐஐடிஎம் குவாலியரில் ஆன்லைன் வகுப்புகள் மூலம் படிப்பைத் தொடர்ந்து வந்தார். 

அவர் கேமிங் தொடர்பான 'SeLFlo'  என்ற யூடியூப் சேனலை நடத்தி வந்தார். சேனலுக்கு 29,600 சந்தாதாரர்கள் இருந்தனர்.

தற்கொலை செய்வதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, தீனா செப்டம்பர் 17, 2015-ன் பழைய விடியோவைப் பதிவேற்றி தற்கொலைக் குறிப்பை ட்வீட் செய்துள்ளார்.

அவர் தனது பதிவில்,  என் குழந்தைப் பருவத்திலிருந்து இதுவரை நான் நிறையக் கஷ்டங்களை அனுபவித்துள்ளேன். உலகத்தைப் பிரிந்து செல்லும் நேரம் வந்துவிட்டது. தொடர்ந்து மனஅழுத்தம், சோகம் மற்றும் கோபத்தின் பிடியில் இனியும் என்னால் சிக்கித் தவிக்க முடியாது. 

தனது வாழ்க்கை நிறைய அதிர்ச்சிகளால் நிரம்பியதாகவும், சிறுவயதிலேயே பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகவும் எழுதினார். மேலும் தனக்கு முன்னால் பெற்றோர்கள் சண்டையிடுவதைப் பற்றியும், அவர்களிடமிருந்து சரியான வழிகாட்டுதலைப் பெறவில்லை என்றும் அவர் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். 

தீனாவின் தந்தை சந்திரசேகரன் இந்திய ரயில்வேயில் மின்னணு பராமரிப்பு பிரிவில் பணியாளராக உள்ளார். தாய் சங்கரி விஞ்ஞானி. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஹைதராபாத்தில் குடியேறிய தம்பதியருக்கு தீனா ஒரே மகள். 

புதனன்று இரவு வீடு திரும்பியபோது அவரது அறையில் தீனா தூங்கிக் கொண்டிருப்பதைக் கண்டதாக மாணவியின் பெற்றோர் போலீசாரிடம் தெரிவித்தனர். மறுநாள் கீழ்த் தளத்தில் இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியுற்ற காவலாளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com