தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

அடுத்த தேர்தலில் போட்டியிடப் போவதில்லை: பி.எஸ்.எடியூரப்பா

அடுத்த தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று கர்நாடக பாஜக தலைவரும், முன்னாள் முதல்வருமான பி.எஸ்.எடியூரப்பா தெரிவித்துள்ளார்.  

News image
Updated On :22 ஜூலை 2022, 12:19 pm

அடுத்த தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று கர்நாடக பாஜக தலைவரும், முன்னாள் முதல்வருமான பி.எஸ்.எடியூரப்பா தெரிவித்துள்ளார். 

கா்நாடக சட்டப் பேரவைத் தோ்தல் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் நடக்கவிருக்கிறது. இத்தேர்தலை சந்திக்க பாஜக, காங்கிரஸ் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன. இருப்பினும் வரும் தோ்தலில் ஆளும் பாஜகவைத் தோற்கடித்து, பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெற காங்கிரஸ் திட்டமிட்டு, அதற்கான முன்னேற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறது. 

இந்த நிலையில் அடுத்த தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று கர்நாடக பாஜக தலைவரும், முன்னாள் முதல்வருமான பி.எஸ்.எடியூரப்பா இன்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, தன்னுடைய சட்டப்பேரவைத் தொகுதியை எனது மகன் பி.ஒய்.விஜயேந்திரனுக்காக விட்டுக்கொடுக்கிறேன். 

ஷிகாரிபுரா வாக்காளர்கள் அவரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். எடியூரப்பா, 1983 ஆம் ஆண்டு முதல் ஒன்பது முறை ஷிகாரிபுரா தொகுதியில் போட்டியிட்டுள்ளார். அதில் 1999 ஆம் ஆண்டு நடந்த தேர்தலை தவிர அனைத்து தேர்தல்களிலும் அவர் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.