சிபிஎஸ்இ 12-ம் வகுப்பில் 496 மதிப்பெண் எடுத்த பார்வை மாற்றுத்திறனாளி மாணவி

பிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாற்றுத்திறனாளி பிரிவினரில் பார்வை திறனாளி ஹன்னா என்ற மாணவி முதல் மதிப்பெண் எடுத்துள்ளார்.
சிபிஎஸ்இ 12-ம் வகுப்பில் 496 மதிப்பெண் எடுத்த பார்வை மாற்றுத்திறனாளி மாணவி

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாற்றுத்திறனாளி பிரிவினரில் கொச்சியைச் சேர்ந்த ஹன்னா என்ற மாணவி முதல் மதிப்பெண் எடுத்து வெற்றிக்கு உடல் குறைபாடு ஒரு தடையல்ல என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளார். 

கொச்சியைச் சேர்ந்த மாணவி ஹன்னா சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 500-க்கு 496 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார்.

பல திறமைகள் கொண்ட மாணவி ஹன்னா கல்வியில் சிறந்து விளங்குவது மட்டுமின்றி கதைகளை எழுதுவதிலும் வல்லவராம். ஜூலை 15ல் ஆறு இளம் பெண்களின் சிறுகதைகளைக் கொண்ட "வெல்கம் ஹோம்" என்ற புத்தகத்தையும் அவர் வெளியிட்டார். 

மேற்படிப்பு படிப்பதில் எந்தவித சிரமத்தையும் சந்திக்கக் கூடாது என்பதற்காக மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான பள்ளியில் சேர்ப்பதற்குப் பதிலாக, சாதாரண பள்ளியில் சேர்க்க நினைத்தார்கள் என் பெற்றோர்கள். 

பள்ளியில் பல சவால்களை சந்தித்தேன். சாதிக்க வேண்டிய சாதனைகள் நிறைய இருப்பதால் இதுபோன்ற சவால்களை எதிர்கொள்ள என்னை வலிமைப்படுத்திக் கொண்டேன் என்று அவர் கூறினார். 

19 வயதான மாணவி நாட்டின் மாற்றுத்திறனாளி மாணவர்கள் பிரிவில் முதலிடம் பிடித்துள்ளார். கொச்சியில் வசிக்கும் ஹன்னா ராஜகிரி கிறிஸ்து ஜெயந்தி பப்ளிக் பள்ளியில் படித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com