

குஜராத் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்தவர்களில் 28 பேர் பலியாகினர்.
குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் மற்றும் போட்டட் மாவட்டத்தில் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட கள்ளச்சாராயத்தை அப்பகுதிகளைச் சேர்ந்த பலரும் குடித்துள்ளனர்.
இதையும் படிக்க: தில்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்திலும் போராட்டம்
இதில் மதுவைக் குடித்த சில மணி நேரங்களில் உடல் நலக் குறைவு மற்றும் மயக்கம் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 50க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அவர்களில் சிகிச்சை பலனின்றி இதுவரை 28 பேர் உயிரிழந்ததாகவும் பலர் ஆபத்தான நிலையில் இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் எனவும் மாவட்ட காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த மரணங்கள் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு கள்ளச்சாராயத்தைத் தயாரித்தவர்களைத் தேடு பணியும் துவங்கியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.