மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

தில்லியில் காங்கிரஸ் எம்.பி.க்கள் 2-வது நாளாக கைது

தில்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் பேரணியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் இரண்டாவது நாளாக தில்லி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

News image
Updated On :27 ஜூலை 2022, 8:00 am

DIN

தில்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் பேரணியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் இரண்டாவது நாளாக தில்லி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சோனியா காந்தி மீதான அமலாக்கத்துறை விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தில்லி நாடாளுமன்ற வளாகம் அருகேவுள்ள விஜய் செளக்கில் இருந்து குடியரசுத் தலைவர் மாளிகை வரை காங்கிரஸ் எம்.பி.க்கள் பேரணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், விஜய் செளக் பகுதியில் காங்கிரஸ் எம்.பி.க்களை தடுத்து நிறுத்திய தில்லி காவல்துறையினர் அவர்களை கைது செய்து தடுப்புக் காவல் மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

முன்னதாக, நேற்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி உள்பட 57 எம்.பி.க்கள் கைது செய்யப்பட்டனர்.

நேஷனல் ஹெரால்டு பத்திரிகையில் சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தொடர்பான வழக்கில், காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி அமலாக்கத் துறை முன்பாக இன்று மூன்றாவது நாளாக ஆஜராகியுள்ளார்.

அமலாக்கத் துறையின் விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இரண்டு நாள்களாக போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.