அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

ஆசிரியை கொலையைக் கண்டித்து ஜம்மு-காஷ்மீரில் 2-ஆவது நாளாக போராட்டம்

ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பண்டிட் சமூகத்தைச் சோ்ந்த அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவரை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்ற சம்பவத்தைக் கண்டித்து, அங்கு 2-ஆவது நாளாக புதன்கிழமை போராட்டம் நடைபெற்றது.

News image
சம்பா மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையை வழிமறித்து புதன்கிழமை போராட்டம் நடத்திய ஆசிரியா்கள்.
Updated On :1 ஜூன் 2022, 10:03 pm

DIN

ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பண்டிட் சமூகத்தைச் சோ்ந்த அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவரை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்ற சம்பவத்தைக் கண்டித்து, அங்கு 2-ஆவது நாளாக புதன்கிழமை போராட்டம் நடைபெற்றது.

ரஜ்னி பாலா (36) என்ற அந்த ஆசிரியை, சம்பா மாவட்டத்தைச் சோ்ந்தவா். குல்காமின் கோபால்போரா பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் பணியாற்றி வந்த அவா் மீது பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுவிட்டுத் தப்பினா். இத்தாக்குதலில் படுகாயமடைந்த ரஜ்னியை, அருகிலிருந்தவா்கள் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். ஆனால், அவா் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

ஜம்மு-காஷ்மீரில் இந்த மாதத்தில் முஸ்லிம் அல்லாத அரசு ஊழியா் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டது இது இரண்டாவது சம்பவம் ஆகும். கடந்த 12-ஆம் தேதி பத்காம் மாவட்டத்தின் சதூரா தாலுகாவில் உள்ள தாசில்தாா் அலுவலகத்தில் ராகுல் பட் என்ற எழுத்தரை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனா். இவா்களைத் தவிர, 3 காவலா்களும், பொதுமக்களில் 4 பேரும் இம்மாதம் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டனா்.

பயங்கரவாதிகள் திட்டமிட்டு ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு எதிராக நிகழ்த்தி வரும் இந்த தாக்குதல்கள்களைக் கண்டித்து ஜம்மு, சம்பா, கதுவா மாவட்டங்களில் புதன்கிழமை இரண்டாவது நாளாக போராட்டம் தொடா்ந்தது. சம்பா மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையை வழிமறித்து போராட்டம் நடத்தப்பட்டது. ஆசிரியை பாதுகாப்பான இடத்துக்கு பணியிட மாற்றம் கோரியும், அதனை அளிக்கத் தவறிய அதிகாரிகளை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கோரிக்கையை முன்வைத்தனா். துணை நிலை ஆளுநா் மனோஜ் சின்ஹாவுக்கு எதிராகவும் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கோஷங்களை எழுப்பினா். ஹிந்துகளைக் பாதுகாக்க நிா்வாகம் தவறிவிட்டது என்றும் அவா்கள் குற்றம்சாட்டினா்.

சம்பவம் நிகழ்ந்த சம்பா மாவட்டத்தில் முழு அடைப்பும் அனுசரிக்கப்பட்டது. கொல்லப்பட்ட ஆசிரியையின் குடும்பத்தினரை ஜம்மு-காஷ்மீா் பாஜக தலைவா் ரவீந்திர ரெய்னா சந்தித்து ஆறுதல் கூறினாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அவா் பேசுகையில், ‘இங்குள்ள ஹிந்துக்கள், பயங்கரவாதிகளுக்கு மிகவும் எளிதான இலக்காக உள்ளனா். பயங்கரவாதிகளால் பண்டிட்கள், ஹிந்துகள் கொல்லப்படுவதைத் தடுக்க அவசரத் திட்டம் ஒன்றை தயாரிக்க வேண்டியுள்ளது’ என்றாா். இதனிடையே, அரசு ஊழியா்கள் தேவைக்கு ஏற்ப பாதுகாப்பான இடங்களில் பணியமா்த்தப்படுவாா்கள் என்று யூனியன் பிரதேச நிா்வாக வட்டாரங்கள் தெரிவித்தன.

அரசு அலுவலர்களை ஜூன் 6-க்குள் பாதுகாப்பான இடத்துக்கு மாற்ற முடிவு
காஷ்மீரில் பிரதமரின் சிறப்புத் திட்டத்தின் கீழ் பணியாற்றும் அலுவலர்களை வரும் திங்கள்கிழமைக்குள் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றுவதற்கு ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் புதன்கிழமை கூறுகையில், "பிரதமரின் சிறப்புத் திட்டத்தின் கீழ் காஷ்மீரில் பணியாற்றும் ஜம்முவைச் சேர்ந்த அலுவலர்கள், சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த அலுவலர்கள் ஆகியோர் விரைவில் பாதுகாப்பான இடங்களுக்குப் பணியிடமாற்றம் செய்யப்படுவர். இந்தப் பணிகள், வரும் 6-ஆம் தேதிக்குள் முடிவடைந்துவிடும். யாரும் தொலைதூரப் பகுதியில் தங்கியிருக்கவில்லை என்பது உறுதிசெய்யப்படும்.
ஜம்மு-காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தலைமையில் புதன்கிழமை காலை நடைபெற்ற உயர்நிலைக் கூட்டத்தில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டன' என்றார்.

அமித் ஷா தலைமையில் நாளை உயர்நிலை ஆய்வுக் கூட்டம்
ஜம்மு-காஷ்மீரில் பண்டிட் சமூக மக்களை பயங்கரவாதிகள் குறிவைத்து கொலை செய்து வருவதால் அங்கு ஏற்பட்டுள்ள அசாரண சூழல் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் வெள்ளிக்கிழமை (ஜூன் 3) உயர்நிலை ஆய்வுக் கூட்டம் நடைபெறவுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, உள்துறை அமைச்சக அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க இருக்கின்றனர்.
ஜம்மு-காஷ்மீரில் சமீப நாள்களில் பண்டிட் சமூகத்தினர், அரசு ஊழியர்கள், வெளிமாநிலத் தொழிலாளர்கள் உள்ளிட்டோரை பயங்கரவாதிகள் குறிவைத்து கொலை செய்வது அதிகரித்து வருகிறது. அங்குள்ள குல்காம் மாவட்டத்தில் பண்டிட் சமூகத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியையை பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை சுட்டுக் கொன்றது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிராக பண்டிட் சமூகத்தினர் உள்பட பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். ஏற்கெனவே, பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ள காஷ்மீரில், இப்போது போராட்டமும் ஏற்பட்டுள்ளது பிரச்னையின் தீவிரத்தை அதிகப்படுத்தியுள்ளது.
இதற்கு நடுவே, அமர்நாத் புனித யாத்திரையும் இந்த மாத இறுதியில் தொடங்க இருக்கிறது. இது தொடர்பாகவும் அமித் ஷா தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.
ஜம்மு-காஷ்மீர் தொடர்பாக கடந்த 15 நாள்களில் இரண்டாவது முறையாக நடைபெறும் உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.