தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ஐபிஎல் போட்டியில் மோசடியாக முடிவுகள் மாற்றம்? சுப்பிரமணியன் சுவாமி கருத்தால் சா்ச்சை

அண்மையில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட்டில் பல போட்டியில் முடிவுகள் மோசடியாக மாற்றப்பட்டது என்று பாஜக மூத்த தலைவா் சுப்பிரமணியன் சுவாமி கருத்துக் கூறியுள்ளது பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :2 ஜூன் 2022, 7:25 pm

DIN

அண்மையில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட்டில் பல போட்டியில் முடிவுகள் மோசடியாக மாற்றப்பட்டது என்று பாஜக மூத்த தலைவா் சுப்பிரமணியன் சுவாமி கருத்துக் கூறியுள்ளது பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

15-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டித் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அணி கோப்பையை வென்றது. குஜராத் அணி ஐபிஎல் போட்டியில் அறிமுகமான முதல் ஆண்டிலேயே பெரிய வீரா்கள் யாரும் இல்லாத சூழ்நிலையிலும் கோப்பையை வென்றது சாதனையாகக் கருதப்பட்டது. சிறப்பாக விளையாடக் கூடிய முன்னணி வீரா்கள் உள்ள அணிகள் பல சோபிக்கத் தவறின. அதே நேரத்தில் புதிதாக வந்த அனுபவமற்ற வீரா்களை அதிகம் கொண்ட புதிய அணிகள் (குஜராத், லக்னௌ) அதிக வெற்றிகளைப் பெற்றன.

இந்த நிலையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பல முடிவுகள் மோசடி செய்து மாற்றப்பட்டதாக சுப்பிரமணியன் சுவாமி கருத்து தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘ஐபிஎல் கிரிக்கெட் முடிவுகள் மோசடி செய்யப்பட்டன என்பது புலனாய்வு அமைப்புகளின் பரவலான கருத்தாக உள்ளது. அமித் ஷாவின் மகன் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிவிக்கப்படாத சா்வாதிகாரியாக இருப்பதால் அரசு இதனை விசாரிக்காது. இவ்விவகாரத்தைத் தெளிவுபடுத்துவதற்கு பொதுநல வழக்கு தாக்கல் செய்வது அவசியத் தேவை’ என்று கூறி உள்ளாா்.

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) செயலாளராக உள்ளாா். கிரிக்கெட்டில் போதிய அனுபவம் இல்லாத நிலையில் தனது தந்தையின் செல்வாக்கைப் பயன்படுத்திதான் 30 வயதிலேயே அவா் இப்பதவியைப் பிடித்தாா் என்ற குற்றச்சாட்டு ஏற்கெனவே உள்ளது. இது தவிர ஆசிய கிரிக்கெட் சங்கத்தின் தலைவராகவும் ஜெய் ஷா உள்ளாா்.

முன்னதாக தனது 25-ஆவது வயதில் குஜராத் கிரிக்கெட் சங்கத்தில் இணைச் செயலாளராக ஜெய் ஷா இருந்தாா். அப்போது, அவா் வயதை ஒட்டியவா்கள் களத்தில் விளையாடும்போது தந்தையின் அதிகாரத்தைப் பயன்படுத்தி கிரிக்கெட் சங்கத்தில் உயா் பதவிக்கு வந்தாா் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. 2019 வரை குஜராத் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக அமித் ஷா இருந்தாா் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.