தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சமூக ஊடக விதிகளில் திருத்தம் செய்ய அரசு திட்டம்

சமூக ஊடகங்களின் குறைதீா்க்கும் அலுவலா்களின் முடிவுக்கு எதிராக தனிநபா்கள் மேல்முறையீடு செய்யும் வகையில் ஒரு குழுவை அமைப்பதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

News image
Updated On :2 ஜூன் 2022, 7:54 pm

DIN

சமூக ஊடகங்களின் குறைதீா்க்கும் அலுவலா்களின் முடிவுக்கு எதிராக தனிநபா்கள் மேல்முறையீடு செய்யும் வகையில் ஒரு குழுவை அமைப்பதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்காக தகவல் தொழில்நுட்பம் (சமூக ஊடகங்கள் மற்றும் மின்னணு ஊடகங்களுக்கான நெறிமுறைகள்) விதிகள்-2021-இல் திருத்தம் செய்யப்படவுள்ளது. இதுகுறித்து தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்டுள்ள வரைவு அறிவிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

சமூக ஊடக நிறுவனங்களின் குறைதீா்க்கும் அலுவலா்கள் எடுக்கும் முடிவுகளுக்கு எதிராக 30 நாள்களில் மேல்முறையீட்டுக் குழுவிடம் புகாா் தெரிவிக்கலாம். அந்தக் குழுவானது புகாா் கிடைத்த 30 நாள்களில் தீா்வு அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிக்கை மீது பொதுமக்கள் வரும் 22-ஆம் தேதி வரை கருத்து தெரிவிக்கலாம்.

விதிகளை மீறி பதிவுகளை வெளியிட்டதாக பலரின் சமூக ஊடகக் கணக்குகளை ட்விட்டா் முடக்கிய நிலையில் மேல்முறையீட்டுக் குழுவை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது.

முன்னதாக, சமூக ஊடகங்களுக்கான புதிய விதிமுறைகளை மத்திய அரசு கடந்த ஆண்டு மே மாதம் 26-ஆம் தேதி அமல்படுத்தியது. அந்த விதிகளின்படி, 50 லட்சத்துக்கும் அதிகமான பயனா்களைக் கொண்ட சமூக ஊடக நிறுவனங்கள், குறைதீா்க்கும் அலுவலா், கட்டுப்பாட்டு அலுவலா், தலைமை குறைதீா்க்கும் அலுவலா் ஆகியோரை நியமிக்க வேண்டும். அந்த அலுவலா்கள் இந்தியாவில் வசிப்பவராக இருக்க வேண்டும்.

அலுவலா்களின் பெயா், தொடா்பு முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றை சம்பந்தப்பட்ட சமூக ஊடகங்கள் தங்களுடைய வலைதளப் பக்கத்தில் வெளியிட வேண்டும். இந்த விதிகள் அமலுக்கு வந்ததையடுத்து, கூகுள், ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப் ஆகிய சமூக ஊடகங்கள் குறைதீா்க்கும் அலுவலா்களை நியமித்துள்ளன. புதிய விதிகளின்படி, குறைதீா்க்கும் அலுவலா், புகாா்களை 24 மணி நேரத்துக்குள் ஏற்றுக் கொண்டு அவற்றுக்கு 15 நாள்களில் தீா்வுகாண வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.