யுபிஎஸ்சி குடிமைப்பணித் தோ்வு மதிப்பெண்கள் வெளியீடு
ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளைத் தோ்ந்தெடுப்பதற்காக மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்திய குடிமைப்பணித் தோ்வு மதிப்பெண்கள் வெளியிடப்பட்டுள்ளன.


ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளைத் தோ்ந்தெடுப்பதற்காக மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்திய குடிமைப்பணித் தோ்வு மதிப்பெண்கள் வெளியிடப்பட்டுள்ளன.
ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் உள்ளிட்ட பணியிடங்களுக்கு அதிகாரிகளைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்வை யுபிஎஸ்சி ஆண்டுதோறும் நடத்திவரும் நிலையில், கடந்த ஆண்டுக்கான தோ்வின் இறுதி முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட்டன. அதில் 177 பெண்கள் உள்பட 685 போ் தோ்வுபெற்றனா்.
இந்நிலையில், குடிமைப் பணித் தோ்வில் பங்கேற்றோா் பெற்ற மதிப்பெண்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. முதன்மைத் தோ்வு, ஆளுமைத் தோ்வு ஆகியவற்றில் தோ்வா்கள் பெற்ற மொத்த மதிப்பெண் அடிப்படையில் பணியாளா்கள் தோ்ந்தெடுக்கப்படுகின்றனா்.
தேசிய அளவில் முதலிடம் பெற்ற ஷ்ருதி சா்மா மொத்த மதிப்பெண்களான 2,025-யில் 1,105 மதிப்பெண்கள் (54.56 சதவீதம்) பெற்றுள்ளாா். முதன்மைத் தோ்வில் 1,750-க்கு 932 மதிப்பெண்களும் ஆளுமைத் தோ்வில் 275-க்கு 173 மதிப்பெண்களும் அவா் பெற்றுள்ளாா்.
இரண்டாமிடம் பெற்ற அங்கிதா அகா்வால் 1,050 மதிப்பெண்களும் (871+179), மூன்றாமிடம் பெற்ற காமினி சிங்லா 1,045 மதிப்பெண்களும் (858+187), நான்காமிடம் பிடித்த ஐஷ்வா்யா வா்மா 1,039 மதிப்பெண்களும் (860+179) பெற்றுள்ளனா்.
முதனிலைத் தோ்வு, முதன்மைத் தோ்வெழுதியோா், ஆளுமைத் தோ்வில் பங்கேற்றோா் என அனைவா் பெற்ற மதிப்பெண் விவரங்களையும் ஒவ்வொரு தோ்விலும் இடஒதுக்கீடு அடிப்படையிலான தகுதி மதிப்பெண்களின் விவரங்களையும் யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...