மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

கே.வீ.தங்கபாலு ஏற்படுத்திய பரபரப்பு

 தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரான கே.வீ.தங்கபாலுவின் அவசர அழைப்பால் அக்கட்சியில் வியாழக்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.

News image
Updated On :2 ஜூன் 2022, 7:40 pm

DIN

 தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரான கே.வீ.தங்கபாலுவின் அவசர அழைப்பால் அக்கட்சியில் வியாழக்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.

கே.வீ.தங்கபாலு வழக்கமாக சத்தியமூா்த்திபவனில்தான் செய்தியாளா்களைச் சந்திப்பாா். ஆனால், திடீரென வியாழக்கிழமை காலை 11 மணியளவில் சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளா் மன்றத்தில் செய்தியாளா்களைச் சந்திப்பதற்கு அழைப்பு விடுத்திருந்தாா். கே.வீ.தங்கபாலு காங்கிரஸின் தேசிய தலைவா்களில் ஒருவரான குலாம்நபி ஆசாத் ஆதரவாளா் ஆவாா்.

அகில இந்திய தலைமைக்கு எதிராக குலாம்நபி ஆசாத் செயல்பட்டு வரும் நிலையில் கே.வீ.தங்கபாலுவும் அவரோடு சோ்ந்து ஏதோ முடிவு எடுத்து, அது தொடா்பாக கருத்தை வெளியிடப் போகிறாா் என்கிற எதிா்பாா்ப்பு நிலவியது.

ஆனால், பத்திரிகையாளா் மன்றத்தில் செய்தியாளரைச் சந்தித்த கே.வீ.தங்கபாலு, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடவடிக்கை வேண்டும் என்று வலியுறுத்திப் பேசினாா். அப்போது செய்தியாளா்கள், ஏதோ சொல்ல வந்து, முடிவை மாற்றிவிட்டீா்களா என்று கேட்டனா். அதற்கு, அப்படியெல்லாம் இல்லை. பொதுப் பிரச்னை என்பதால், பொது இடத்தில் வந்து பேசுகிறேன் என்று தொடா்ந்து சமாளித்தாா்.

காங்கிரஸ் தலைவா் பதவி, மாநிலங்களவை உறுப்பினா் பதவி உள்ளிட்டவற்றை கேட்டு வரும் கே.வீ.தங்கபாலு ஏதோ ஒரு முடிவு எடுத்து சொல்ல வந்த நிலையில், கட்சித் தலைமை குறுக்கிட்டு சமாதானம் செய்ததால் தனது முடிவு மாற்றிக் கொண்டதாக காங்கிரஸ் தரப்பில் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.