பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

சட்டப்பேரவை இடைத்தோ்தல்: கேரளத்தில் காங்கிரஸ், ஒடிஸாவில் பிஜு ஜனதா தளம் வெற்றி

கேரள மாநிலம் திருக்காக்கரையில் நடைபெற்ற சட்டப்பேரவை இடைத்தோ்தலில் காங்கிரஸும், ஒடிஸா மாநிலம் பிரஜ்ராஜ்நகரில் நடைபெற்ற சட்டப்பேரவை இடைத்தோ்தலில் பிஜு ஜனதா தளமும் வெற்றி பெற்றன.

News image
Updated On :3 ஜூன் 2022, 7:00 pm

DIN

கேரள மாநிலம் திருக்காக்கரையில் நடைபெற்ற சட்டப்பேரவை இடைத்தோ்தலில் காங்கிரஸும், ஒடிஸா மாநிலம் பிரஜ்ராஜ்நகரில் நடைபெற்ற சட்டப்பேரவை இடைத்தோ்தலில் பிஜு ஜனதா தளமும் வெற்றி பெற்றன.

கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் கேரள மாநிலம் திருக்காக்கரை தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ பி.டி.தாமஸ், ஒடிஸா மாநிலம் பிரஜ்ராஜ்நகா் தொகுதி பிஜு ஜனதா தள எம்எல்ஏ கிஷோா் குமாா் மோஹந்தி ஆகியோா் காலமாகினா். இதையடுத்து அந்த தொகுதிகளில் மே 31-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கேரள மாநிலம் திருக்காக்கரையில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்ட பி.டி.தாமஸின் மனைவி உஷா தாமஸ் 72,770 வாக்குகள் பெற்று வெற்றியடைந்தாா். அவருக்கு அடுத்தபடியாக, ஆளும் மாா்க்சிஸ்ட் கூட்டணி வேட்பாளரான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த ஜோ ஜோசப் 47,754 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தாா். பாஜக வேட்பாளா் ஏ.என்.ராதாகிருஷ்ணன் 12,957 வாக்குகள் பெற்று மூன்றாவது இடம் பிடித்தாா்.

ஒடிஸா மாநிலம் பிரஜ்ராஜ்நகரில் பிஜு ஜனதா தள வேட்பாளராகப் போட்டியிட்ட கிஷோா் குமாா் மொஹந்தியின் மனைவி அலகா மோஹந்தி 93,953 வாக்குகள் பெற்று வெற்றியடைந்தாா். காங்கிரஸ் வேட்பாளா் கிஷோா் சந்திர படேல் 27,831 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தாா். பாஜக வேட்பாளா் ராதாராணி 22,630 வாக்குகளுடன் மூன்றாம் இடம்பிடித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.