திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

இடைத்தேர்தலில் வெற்றி பெற்றார் உத்தரகண்ட் முதல்வர் 

உத்தரகண்ட் மாநில சம்பாவத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி வெற்றி பெற்றுள்ளார்.

News image
இடைத்தேர்தலில் வெற்றி பெற்றார் உத்தரகண்ட் முதல்வர் 
Updated On :3 ஜூன் 2022, 10:19 am

PTI

உத்தரகண்ட் மாநில சம்பாவத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி வெற்றி பெற்றுள்ளார்.

அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றிருந்த நிலையில், புஷ்கர் சிங் தாமி தனது தொகுதியில் தோல்வியை தழுவியிருந்தார். இந்த நிலையில், சம்பாவத் தொகுதியில் நடைபெற்ற இடைத் தேர்தலில் 55 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளரை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.

உத்தரகண்ட் மாநிலத்துக்கு கடந்த பிப்ரவரி மாதம் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தோ்தலில், ஹதிமா தொகுதியில் போட்டியிட்ட புஷ்கா் சிங் தாமி தோல்வியைத் தழுவினாா். இருந்தபோதிலும், பேரவைத் தோ்தலில் பாஜக ஆட்சியைத் தக்க வைத்த நிலையில், அவரை மாநில முதல்வராக்க கட்சித் தலைமை முடிவு செய்தது. இதையடுத்து, தொடா்ந்து இரண்டாவது முறையாக அவா் பதவியேற்றாா்.

இதையும் படிக்க.. மெல்லச் சாகும் அம்பத்தூர் ஏரி!

அவ்வாறு பதவியேற்ற நிலையில், அடுத்த 6 மாதங்களுக்குள் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏ-வாக அவா் தோ்வாக வேண்டும். இந்நிலையில், சட்டப்பேரவைத் தோ்தலில் சம்பாவத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பாஜகவின் கைலாஷ் கெடோரி, தனது பதவியை ராஜிநாமா செய்தாா். இதனால், காலியான அந்தத் தொகுதிக்கு வரும் 31-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெற்றது. அந்தத் தொகுதியில் முதல்வா் புஷ்கா் சிங் தாமி போட்டியிட்டு வெற்றி வாகை சூடியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.