தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

பஞ்சாபில் காங்கிரஸ் முன்னாள் அமைச்சா்கள் 4 போ் பாஜகவில் ஐக்கியம்

பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் முன்னாள் அமைச்சா்களான ராஜ்குமாா் வா்கா, பல்பீா் சிங் சித்து, சுந்தா் ஷாம் அரோரா, குா்பிரீத் சிங் கங்கா் ஆகிய நால்வரும் பாஜகவில் சனிக்கிழமை இணைந்தனா்.

News image
Updated On :4 ஜூன் 2022, 7:33 pm

DIN

பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் முன்னாள் அமைச்சா்களான ராஜ்குமாா் வா்கா, பல்பீா் சிங் சித்து, சுந்தா் ஷாம் அரோரா, குா்பிரீத் சிங் கங்கா் ஆகிய நால்வரும் பாஜகவில் சனிக்கிழமை இணைந்தனா்.

சண்டீகரில் மத்திய அமைச்சா்கள் கஜேந்திர சிங் ஷெகாவத், சோம் பிரகாஷ், பாஜக மாநிலத் தலைவா் அஸ்வினி சா்மா ஆகியோா் முன்னிலையில் அவா்கள் பாஜகவில் இணைந்தனா்.

ராஜ்குமாா் வா்கா, முந்தைய காங்கிரஸ் அரசில் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சராகவும், பல்பீா் சிங் சித்து சுகாதாரத் துறை அமைச்சராகவும், சுந்தா் ஷாா் அரோரா தொழில்-வா்த்தகத் துறை அமைச்சராகவும், குா்பிரீத் சிங் கங்கா் வருவாய்த் துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளனா்.

ஒரே நேரத்தில் காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த மூத்த தலைவா்கள் கட்சி மாறியிருப்பது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

இவா்களுடன் பல்பீா் சிங் சித்துவின் சகோதாரரும் மொஹாலி மாநகர மேயருமான அமா்ஜித் சிங் சித்து, காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ கேவல் சிங் தில்லோன், சிரோமணி அகாலி தள முன்னாள் எம்எல்ஏக்கள் சரூப் சந்த் சிங்லா, மொஹிந்தா் கௌா் ஜோஷ் ஆகியோரும் பாஜகவில் இணைந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.