புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

சித்து மூஸேவாலா குடும்பத்துடன் ராகுல் காந்தி இன்று சந்திப்பு

மறைந்த பஞ்சாபி பாடகா் சித்து மூஸேவாலா குடும்பத்தை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இன்று நேரில் சந்தித்து ஆறுதல் சொல்லவுள்ளார்.

News image

ராகுல் காந்தி (கோப்புப் படம்)

Updated On :7 ஜூன் 2022, 3:15 am

DIN

மறைந்த பஞ்சாபி பாடகா் சித்து மூஸேவாலா குடும்பத்தை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இன்று நேரில் சந்தித்து ஆறுதல் சொல்லவுள்ளார்.

பஞ்சாபில் பரபல பாடகராக இருந்த சித்து மூஸேவாலா, கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் சாா்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தாா். இந்த நிலையில், சித்து மூஸேவாலா உள்பட 424 பேருக்கு அளிக்கப்பட்டுவந்த பாதுகாப்பை மாநில அரசு கடந்த மே 29-ஆம் தேதி திரும்பப் பெற்ற நிலையில், அன்றைய தினமே மா்ம நபா்களால் மூஸேவாலா சுட்டுக்கொல்லப்பட்டாா்.

இந்நிலையில், வெளிநாடு பயணம் மேற்கொண்டிருந்த ராகுல் காந்தி நாடு திரும்பிய நிலையில், இன்று சித்து மூஸேவாலாவின் சொந்த ஊரான மான்சா மாவட்டத்திலுள்ள மூசா கிராமத்திற்கு சென்று சித்துவின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் சொல்லவுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.