மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசு சரிவு

அந்நியச் செலாவணி சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 12 காசு வீழ்ச்சி கண்டு வரலாறு காணாத அளவுக்கு குறைந்தது.

News image
Updated On :7 ஜூன் 2022, 7:25 pm

DIN

அந்நியச் செலாவணி சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 12 காசு வீழ்ச்சி கண்டு வரலாறு காணாத அளவுக்கு குறைந்தது.

இதுகுறித்து செலாவணி வட்டாரத்தினா் கூறியது:

சா்வதேச சந்தையில் டாலருக்கான தேவை வெகுவாக அதிகரித்தது. மேலும், லாப நோக்கு விற்பனையால் உள்நாட்டு பங்குச் சந்தையும் கடும் சரிவைச் சந்தித்தது. இவைதவிர, கச்சா எண்ணெய் விலை உயா்வு, அந்நிய முதலீட்டில் தொடா்ச்சியான வெளியேற்றம் போன்றவையும் செலாவணி சந்தையில் ரூபாய் மதிப்பு முன்னேற்றத்துக்கு தடையை ஏற்படுத்தின.

வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு தொடக்கத்தில் 77.72-ஆக இருந்தது. இது, வா்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 77.69 வரையிலும் குறைந்தபட்சமாக 77.80 வரையிலும் சென்றது.

வா்த்தகத்தின் இறுதியில் ரூபாய் மதிப்பு 12 காசு குறைந்து 77.78-ஆக வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சி கண்டது என வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

கச்சா எண்ணெய்

பீப்பாய் 119 டாலா்

சா்வதேச சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முன்பேர வா்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் 119.07 டாலருக்கு வா்த்தகம் செய்யப்பட்டதாக சந்தை வட்டாரத்தினா் தெரிவித்தனா்.

வெளியேறிய ரூ.2,293 கோடி

அந்நிய முதலீடு

மூலதனச் சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தின்போது அந்நிய நிதி நிறுவன முதலீட்டாளா்கள் நிகர அளவில் ரூ.2,293.98 கோடி மதிப்பிலான பங்குகளை விற்று முதலீட்டை வாபஸ் பெற்றதாக சந்தைப் புள்ளிவிவரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.