மேற்கு வங்கம்: பேலூர் மடத்தில் நட்டா வழிபாடு

மேற்கு வங்காளத்திற்கு மூன்று நாள் பயணமாக வந்துள்ள பாரதிய ஜனதா கட்சித் தலைவர் ஜேபி நட்டா, ஹவுராவில் உள்ள பேலூர் மடத்தில் வியாழக்கிழமை வழிபாடு செய்தார். 
West Bengal: Nadda offers prayers at Belur Math
West Bengal: Nadda offers prayers at Belur Math
Updated on
1 min read

மேற்கு வங்காளத்திற்கு மூன்று நாள் பயணமாக வந்துள்ள பாரதிய ஜனதா கட்சித் தலைவர் ஜேபி நட்டா, ஹவுராவில் உள்ள பேலூர் மடத்தில் வியாழக்கிழமை வழிபாடு செய்தார். 

நட்டா செவ்வாயன்று மாலை கொல்கத்தா வந்தார். பாஜக தலைவர் கட்சித் தலைவர்களுடன் பல முக்கிய சந்திப்புகளை நடத்தி வருகிறார். 

நட்டா பாஜக எம்பிக்கள்,  எம்எல்ஏக்கள் மற்றும் மாநில அலுவலகப் பணியாளர்களுடன் சந்திப்புகளை நடத்துகிறார். மேலும் காரியகர்த்தா சம்மேளனத்தை தொடர்ந்து இன்று நக்ரிக் சம்மேளனக் கூட்டத்தையும் நடத்துவார் என்று தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

பல தலைவர்கள் சமீப காலமாக பாஜகவில் இருந்து விலகினர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com