கர்நாடகத்தில் 500-ஐ தாண்டிய கரோனா: பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம்

கர்நாடகத்தில் கரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 500-ஐ தாண்டியுள்ள நிலையில், பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் என்று அரசு தெரிவித்துள்ளது. 
கரோனா கட்டுப்பாடுகளை விலக்கியது மகாராஷ்டிரம்; முகக்கவசம் கட்டாயமில்லை
கரோனா கட்டுப்பாடுகளை விலக்கியது மகாராஷ்டிரம்; முகக்கவசம் கட்டாயமில்லை
Updated on
1 min read

கர்நாடகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக கரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 500-ஐ தாண்டியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

மாநில சுகாதாரத் துறை வெளியிட்ட தகவலின்படி, 

சனிக்கிழமை(இன்று) முதல் கரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை கடுமையாக அமல்படுத்துவதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

மேலும், பொது இடங்களில் முகக்கவசம் அணிவது, சமூக விலகல் போன்ற கரோனா நடவடிக்கைகள் கண்டிப்பாக பின்பற்றுமாறு அரசு வலியுறுத்தியுள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 525 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ளது. கடந்த மூன்றரை மாதங்களில் நேர்மறை விகிதம் 2.3 சதவீதமாக உயர்ந்துள்ளது. 

கரோனா நெறிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிப்பது குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை. தொற்று தொடர்ந்து அதிகரிக்கும்பட்சத்தில், அபராதம் விதிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று ஒரு வட்டாரம் தெரிவித்துள்ளது. 

தற்போது மாநிலத்தில் செயலில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 3,177 ஆக உயர்ந்துள்ளது. சிலர் மருத்துவமனைகளிலும், சிலர் அவரவர் வீடுகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த பிப்ரவரியில் கரோனா 516 பதிவாகிய நிலையில், தற்போது மீண்டும் மாநிலத்தில் 500ஐ தாண்டியுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com