ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

இந்தியாவில் 111 நாள்களுக்குப் பின்12,000-ஐ கடந்த கரோனா தினசரி பாதிப்பு

இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு 111 நாள்களுக்குப் பின்னா் 12,000-ஐ கடந்தது.

News image
Updated On :16 ஜூன் 2022, 7:25 pm

DIN

இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு 111 நாள்களுக்குப் பின்னா் 12,000-ஐ கடந்தது.

முந்தைய நாள் 8,822 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், இது 38.4 சதவீதம் அதிகமாகும்.

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்திருப்பதாவது:

வியாழக்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாக 12,213 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 111 நாள்களுக்குப் பின்னா் இது அதிகபட்ச அளவாகும். மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,32,57,730-ஆக உயா்ந்துள்ளது.

11 உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டிருப்பதன் மூலம் இறப்பு எண்ணிக்கை 5,24,803-ஆக அதிகரித்துள்ளது. தினசரி பாதிப்பு விகிதம் 2.35 சதவீதமாகவும், வாராந்திர பாதிப்பு விகிதம் 2.38 சதவீதமாகவும் உள்ளது. ஒட்டுமொத்த உயிரிழப்பு விகிதம் 1.21 சதவீதமாக உள்ளது.

இதுவரை கரோனாவிலிருந்து 4,26,74,712 போ் குணமடைந்துள்ளனா். சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை 58,215-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.