கோப்புப் படம்
கோப்புப் படம்

பண விவகாரத்தில் ஒருவர் அடித்துக் கொலை: ராஜஸ்தான்

 பணப் பரிமாற்றத்தில் ஏற்பட்ட பிரச்னையினால் இளைஞர் ஒருவர் ராஜஸ்தானில் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.
Published on

பணப் பரிமாற்றத்தில் ஏற்பட்ட பிரச்னையினால் இளைஞர் ஒருவர் ராஜஸ்தானில் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.

நரேஷ் ஜத் (28 வயது) என்பவர் ராஜஸ்தானின் தால் கிராமத்தைச் சேர்ந்தவர். இந்த இளைஞர் நேற்று (ஜூன் 15) அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். இந்த வழக்கில் அங்கித் குமார், சத்வீர் ஜத்,பப்லு,முகேஷ், ரன்வீர் மற்றும் மகாவீர் என்ற  6 பேர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 


உயிரிழந்த இளைஞரின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் இந்த 6 பேரின் மீதும் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

 
நேற்று (ஜூன் 15) புதன்கிழை நரேஷை அங்கித் குமார் வெளியே அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. அதன் பின் இரவு நீண்ட நேரத்திற்கு பிறகு நரேஷின் உடல் அவரது வீட்டிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் கண்டெடுக்கப்பட்டது. அவரது உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்தது கண்டறியப்பட்டது. இதனையடுத்து, நரேஷின் உடல் உறவினர்களிடம் பிரேதப் பரிசோதனைக்குப் பின் வழங்கப்படும் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com