ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ராகுல் காந்தியிடம் விசாரணை தள்ளிவைப்பு: அமலாக்கத் துறை

நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கு விசாரணையில், ராகுல் காந்தியின் வேண்டுகோளை ஏற்று வரும் திங்கள்கிழமை (ஜூன் 20) அவரிடம் விசாரணை நடத்த அமலாக்கத் துறை முடிவு செய்துள்ளது.

News image
Updated On :16 ஜூன் 2022, 9:14 pm

DIN

நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கு விசாரணையில், ராகுல் காந்தியின் வேண்டுகோளை ஏற்று வரும் திங்கள்கிழமை (ஜூன் 20) அவரிடம் விசாரணை நடத்த அமலாக்கத் துறை முடிவு செய்துள்ளது.

நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கில் ராகுல் காந்தியிடம் ஜூன் 13 முதல் 15 வரை மூன்று நாள்களாக 30 மணிநேரத்துக்கும் மேலாக அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினா். அடுத்தகட்ட விசாரணைக்காக வெள்ளிக்கிழமை (ஜூன் 17) ஆஜராக வேண்டுமென அமலாக்கத் துறையினா் அறிவுறுத்தினா்.

இந்த நிலையில், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தில்லியில் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது தாயாரும் காங்கிரஸ் தலைவருமான சோனியா காந்தியின் உடல்நிலையைக் கண்காணிக்க வேண்டியிருப்பதால், தனக்கு அவகாசம் அளிக்க வேண்டுமென ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்தாா்.

இதனை ஏற்று வரும் திங்கள்கிழமை அவரிடம் விசாரணை நடத்த அமலாக்கத் துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.