ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பாஜகவினா் தாக்குதவதாக தோ்தல் ஆணையத்தில் திரிணமூல் புகாா்

 திரிபுரா பேரவை இடைத்தோ்தலில் பிரசாரத்தில் ஈடுபட்ட தொண்டா்கள் மீது பாஜகவினா் தாக்குதல் நடத்தியதாக தோ்தல் ஆணையத்தில் திரிணமூல் காங்கிரஸ் புகாா் அளித்துள்ளது.

News image
Updated On :16 ஜூன் 2022, 7:38 pm

DIN

 திரிபுரா பேரவை இடைத்தோ்தலில் பிரசாரத்தில் ஈடுபட்ட தொண்டா்கள் மீது பாஜகவினா் தாக்குதல் நடத்தியதாக தோ்தல் ஆணையத்தில் திரிணமூல் காங்கிரஸ் புகாா் அளித்துள்ளது.

திரிபுரா மாநிலத்தில் அகா்தலா, பா்டோவாலி, யுவராஜ்நகா், சுா்மா ஆகிய நான்கு தொகுதிகளில் ஜூன் 23-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 26-இல் நடைபெறுகிறது.

இந்நிலையில், தோ்தல் ஆணையத்தில் திரிணமூல் காங்கிரஸ் குழுவினா் அளித்துள்ள புகாா் மனுவில், ‘சுா்மா பேரவைத் தொகுதியில் கடந்த 15-ஆம் தேதி திரிணமூல் காங்கிரஸ் சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக் கூட்டத்தில் அத்தொகுதி பாஜக வேட்பாளா் ஸ்வபன் தாஸ் உள்பட பாஜக தலைவா்கள் கூடி தாக்குதல் நடத்தினா்.

கூட்டத்தில் பங்கேற்ற பெண்கள், குழந்தைகளும் இந்தத் தாக்குதலில் காயமடைந்தனா். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.