75 நாள்களில் 75 கடற்கரைகளைத் தூய்மைப்படுத்தும் இயக்கம்: அமைச்சர் அறிவிப்பு

75 நாள்களில் 75 கடற்கரைகளைத் தூய்மைப்படுத்தும் இயக்கம்: அமைச்சர் அறிவிப்பு

75 நாள்களில் 75 கடற்கரைகளைத் தூய்மைப்படுத்தும் இயக்கம் வருகிற ஜூலை 3 முதல் செப்டம்பர் 17 வரை நடைபெறும் என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார். 
Published on

75 நாள்களில் 75 கடற்கரைகளைத் தூய்மைப்படுத்தும் இயக்கம் வருகிற ஜூலை 3 ஆம் தேதி முதல் செப்டம்பர் 17 ஆம் தேதி வரை நடைபெறும் என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.

'சர்வதேச கடலோரத் துப்புரவு நாள் 2022' செப்டம்பர் 17 அன்று கடைப்பிடிக்கப்படுவதையொட்டி அதுகுறித்த ஆய்வுக் கூட்டம் தில்லியில் வியாழக்கிழமை
நடைபெற்றது. 

நாடு சுதந்திரம் அடைந்த 75-வது ஆண்டு கொண்டாட்டம் நடைபெறும் இந்த வேளையில், 75 நாள்கள் கடலோரத் தூய்மை இயக்கம் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார். 

கடற்கரைப் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் 75 நாள்கள் நடைபெறும் இந்த கடலோரத் தூய்மை இயக்கம் இதுவரையில்லாத மிகப்பெரிய இயக்கமாக இருக்கும் என்றும் இதில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் பங்கேற்க வேண்டும் என்றும் கூறினார். 

'இந்த இயக்கத்தின் இலக்கு கடற்கரைகளிலிருந்து 1,500 டன் குப்பைகளை அகற்றுவதாகும், கடல்வாழ் உயிரினங்களுக்கும் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கும் பெரும் நிவாரணமாக இருக்கும்' என்றும் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com