சிரபுஞ்சியில் ஒரே நாளில் 972 மி.மீ. மழை

மேகாலய மாநிலத்தில் அதிக சிறப்பு வாய்ந்த சிரபுஞ்சி பகுதியில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவு பெற்ற 24 மணி நேரத்தில் மட்டும் 972 மி.மீ. மழை பதிவாகி புதிய வரலாறு எழுதப்பட்டுள்ளது.
சிரபுஞ்சியில் ஒரே நாளில் 972 மி.மீ. மழை
சிரபுஞ்சியில் ஒரே நாளில் 972 மி.மீ. மழை


புது தில்லி: மேகாலய மாநிலத்தில் அதிக சிறப்பு வாய்ந்த சிரபுஞ்சி பகுதியில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவு பெற்ற 24 மணி நேரத்தில் மட்டும் 972 மி.மீ. மழை பதிவாகி புதிய வரலாறு எழுதப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு நாள்களுக்கு முன்புதான், சிரபுஞ்சியில் 811 மி.மீ. மழை பதிவாகி புதிய சாதனை படைக்கப்பட்டநிலையில், அடுத்த இரண்டு நாள்களில் மழை தனது சாதனையை  தானே முறியடித்துள்ளது.

கடந்த 1995ஆம் ஆண்டுக்குப் பிறகு, வியாழக்கிழமை பெய்திருக்கும் 972 மி.மீ. மழையே அதிகப்படியானது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

உலகிலேயே அதிக மழைப்பொழிவு காணப்படும் சிரபுஞ்சியில், இதுவரை 9 முறை இந்த ஜூன் மாதத்தில் மட்டும் 800 மி.மீ. தாண்டி மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. இந்த ஜூன் மாதத்தில் மட்டும், வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி சிரபுஞ்சியில் இதுவரை 4081 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com