டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

'அக்னிபத்' திட்டம்: உ.பி. தலைநகரில் ஊரடங்கு

போராட்டங்கள் வலுத்து வருவதால் உத்தரப் பிரதேச தலைநகர் நொய்டாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

News image
Updated On :20 ஜூன் 2022, 7:07 am

DIN

அக்னிபத் திட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் வலுத்து வருவதால் உத்தரப் பிரதேச தலைநகர் நொய்டாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

நாட்டில் உள்ள இளைஞர்களுக்காக 4 ஆண்டுகால ஒப்பந்த அடிப்படையில் ராணுவத்திற்கு ஆட்கள் சேர்க்கும் வகையில் அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. 

மத்திய அரசின் இந்த ராணுவ ஆள்சோ்ப்பு திட்டத்துக்கு எதிராக உத்தர பிரதேசத்தின் பல மாவட்டங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மாநிலத்தில் இதுவரை 387 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். தலைநகர் நொய்டாவில் மட்டும் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதாக 15 பேரை காவல் துறை கைது செய்துள்ளது.

இந்நிலையில் போராட்டம் தீவிரமடைவதைத் தவிர்க்கும் வகையில் தலைநகர் நொய்டாவில் மாவட்ட காவல் துறை ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.  பொதுமக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் எனவும், பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது. 

அக்னிபத் திட்டத்துக்கு எதிராக நொய்டாவில் நடைபெற்ற போராட்டத்தில் 8 காவலர்கள் உள்பட ஓட்டுநர் ஒருவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக காவல் துறை தெரிவித்துள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.