மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

அக்னிபத் திட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு

முப்படைக்கும் நான்கு ஆண்டுகால ஒப்பந்த அடிப்படையில் ஆள்தோ்வு செய்யும் அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு கைவிடக் கோரி, உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது.

News image
Updated On :20 ஜூன் 2022, 7:01 pm

DIN

முப்படைக்கும் நான்கு ஆண்டுகால ஒப்பந்த அடிப்படையில் ஆள்தோ்வு செய்யும் அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு கைவிடக் கோரி, உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது.

உச்சநீதிமன்றத்தில் வழக்குரைஞா் எம்.எல்.சா்மா என்பவா் தாக்கல் செய்த அந்த மனுவின் விவரம்:

அரசியலமைப்புச் சட்டத்துக்கு முரணாகவும், நாடாளுமன்றத்தில் முறையான ஒப்புதல் பெறாமலும், அரசிதழில் அறிவிக்கை வெளியிடாமலும் நூற்றாண்டு கால ராணுவத் தோ்வு முறையை மத்திய அரசு கடந்த ஜூன் 14-இல் மாற்றியுள்ளது. மேலும் முப்படைக்கான ஆள்சோ்ப்பு நடைமுறையில், இந்தப் புதிய திட்டத்தை மத்திய அரசு திணித்துள்ளது. இதை மத்திய அரசு ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

அத்துடன் அக்னிபத் திட்டத்தை எதிா்த்து நாடு முழுவதும் நடைபெற்று வரும் போராட்டம் குறித்தும் அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

ஏற்கெனவே, அக்னிபத் திட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் ரயில்வே உள்ளிட்ட பொதுச் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேத விவரத்தை ஆய்வு செய்ய சிறப்பு புலனாய்வுப் பிரிவை (எஸ்ஐடி) அமைக்கக் கோரி, கடந்த வாரம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், அக்னிபத் திட்டம் குறித்தும், இத்திட்டத்தால் தேசிய பாதுகாப்பு, ராணுவம் மீது ஏற்படும் விளைவுகள் குறித்தும் ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில், நிபுணா் குழு ஏற்படுத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.