கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

ராகுல் காந்தியிடம் 30 நிமிட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் விசாரணை

நேஷனல் ஹெரால்டு பத்திரிகை தொடர்புடைய பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறை முன்பு 5-வது நாளாக விசாரணைக்கு ஆஜராகியுள்ள ராகுல் காந்தியிடம் 9 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

News image
கோப்புப்படம்
Updated On :21 ஜூன் 2022, 3:23 pm

DIN


நேஷனல் ஹெரால்டு பத்திரிகை தொடர்புடைய பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறை முன்பு 5-வது நாளாக விசாரணைக்கு ஆஜராகியுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியிடம் 9 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பணமோசடி வழக்கு தொடர்பாக ராகுல் காந்தியிடம் கடந்த வாரம் மூன்று நாள்களில் சுமார் 30 மணி நேரம் விசாரணை நடத்தியது அமலாக்கத் துறை. இதன்பிறகு, தாயாரும், காங்கிரஸ் இடைக்காலத் தலைவருமான சோனியா காந்தியின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்குமாறு ராகுல் காந்தி கேட்டுக்கொண்டார். 

இதையடுத்து, திங்கள்கிழமை ஆஜராகுமாறு அமலாக்கத் துறை தெரிவித்தது. இதன்பேரில் அவரிடம் நான்காவது நாளாக திங்கள்கிழமை விசாரணை நடத்தப்பட்ட நிலையில், 5-வது நாளாக இன்றும் (செவ்வாய்க்கிழமை) அமலாக்கத் துறை விசாரணைக்கு ஆஜரானார் ராகுல் காந்தி.

தில்லியிலுள்ள அமலாக்கத் துறை தலைமையகத்துக்கு காலை 11.15 மணியளவில் வந்த ராகுல் காந்தியிடம் பிற்பகலுக்குப் பிறகு இடைவெளி இல்லாமல் விசாரணை நடத்தப்பட்டது. இதன்பிறகு, இரவு 8.30 மணியளவில் அமலாக்கத் துறை அலுவலகத்திலிருந்து ராகுல் காந்தி புறப்பட்டார்.

30 நிமிடங்கள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் விசாரணை நடத்த அமலாக்கத் துறை திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இதுவரை 5 முறை விசாரணைக்கு ஆஜராகியுள்ள ராகுல் காந்தியிடம் அமலாக்கத் துறை சுமார் 50 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.