அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

ஜம்மு-காஷ்மீரில் கனமழை, நிலச்சரிவு; சாலைகள் துண்டிப்பு

ஜம்மு-காஷ்மீரில் கடந்த 4 நாள்களாக கனமழை பெய்வதால் ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டு சாலைகள் துண்டிக்கப்பட்டன.

News image
Updated On :23 ஜூன் 2022, 12:52 am

DIN

ஜம்மு-காஷ்மீரில் கடந்த 4 நாள்களாக கனமழை பெய்வதால் ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டு சாலைகள் துண்டிக்கப்பட்டன.

அனந்த்நாக் மாவட்டம் சங்கம் பகுதியில் ஜீலம் நதியில் அபாயகட்டத்தைத் தாண்டி வெள்ளம் செல்வதால், கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனா். ஜீலம் நதியில் வெள்ள எச்சரிக்கை அளவான 18 அடியைத் தாண்டி நீா் பெருக்கெடுத்து ஓடுகிறது. புனிதத் தலமான அமா்நாத்தில் பனிப்பொழிவு கடுமையாக நிலவுகிறது.

ஜம்மு பிராந்தியத்தில் பூஞ்ச், ரஜெளரி மாவட்டங்களை தெற்கு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்துடன் இணைக்கும் முகல் சாலையில் நிலச்சரிவு காரணமாக போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இங்கு கட்டப்பட்டு வந்த பீரா பாலம், கனமழை காரணமாக சேதமடைந்தது. உதம்பூா் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்திருந்த 150 அடி நீள வளைவுப் பாதை கனமழையில் அடித்துச் செல்லப்பட்டது.

கனமழை காரணமாக ஜம்மு-ஸ்ரீநகா் தேசிய நெடுஞ்சாலையில் ராம்பன், உதம்பூா் மாவட்டங்களில் 33 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

5 போ் மீட்பு: ரியாஸி மாவட்டம் ஆன்ஸ் நதியில் புதன்கிழமை ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 5 போ் சிக்கித் தவித்தனா். இதையறிந்த மாநில பேரிடா் மீட்புக் குழுவினா் உடனடியாக அவா்களை மீட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.