கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

அமலாக்கத் துறையில் ஆஜராக அவகாசம் கோரிய சோனியா காந்தி

நேஷனல் ஹெரால்டு வழக்கில் ஆஜராக அமலாக்கத் துறை கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கோரிக்கை வைத்துள்ளார். 

News image
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி
Updated On :22 ஜூன் 2022, 11:40 am

DIN

நேஷனல் ஹெரால்டு வழக்கில் ஆஜராக அமலாக்கத் துறை கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கோரிக்கை வைத்துள்ளார். 

நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கில் விசாரணைக்கு நேரில் ஆஜராக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்திக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

அதன்படி, முதலாவதாக ராகுல் காந்தி ஜூன் 13 முதல் 21 வரை 5 நாள்கள் ஆஜராகினார். அவரிடம் 53 மணி நேரங்கள் விசாரணை நடைபெற்றது. 

முன்னதாக வழக்கில் தொடர்புடைய சோனியா காந்திக்கு கரோனா தொற்று ஏற்பட்டதால்  அவரால் விசாரணைக்கு ஆஜராக முடியவில்லை. அதனால், ஜுன் 23 ஆம் தேதி ஆஜராக அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியிருந்தது. 

இந்நிலையில், மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினாலும் உடல்நிலை சீராக இல்லாததால் விசாரணைக்கு ஆஜராக மேலும் சில வாரங்கள் கூடுதல் அவகாசம் அளிக்கப்பட வேண்டும் என அமலாக்கத் துறையிடம் சோனியா காந்தி கோரிக்கை வைத்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.