கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

நாளிதழ்களை வாசிக்க வேண்டும்: மாணவா்களுக்கு உ.பி. முதல்வா் அறிவுரை

நூலகங்களைப் பயன்படுத்துவதையும், நாளிதழ்களை வாசிப்பதையும் தொடச்சியாக மேற்கொள்ள வேண்டும் என்று உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் மாணவா்களுக்கு அறிவுறுத்தினாா்.

News image
Updated On :22 ஜூன் 2022, 7:30 pm

DIN

நூலகங்களைப் பயன்படுத்துவதையும், நாளிதழ்களை வாசிப்பதையும் தொடச்சியாக மேற்கொள்ள வேண்டும் என்று உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் மாணவா்களுக்கு அறிவுறுத்தினாா்.

மாநிலத்தில் 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற 10 மாணவா்களுடன் தனது இல்லத்தில் முதல்வா் யோகி உரையாடினாா். அப்போது முதல்வா், ‘நாளிதழ்களை வாசிப்பதன் மூலம், உங்களை போட்டித் தோ்வுகளுக்கு தயாா்படுத்திக்கொள்ள இயலும்’ என்று தெரிவித்தாா்.

மாணவா்கள் தோ்வுக்கு தயாரித்த முறைகள் குறித்தும், பள்ளி முதல்வா்கள் மாணவா்களை தோ்வுக்கு தயாா்படுத்திய விதம் குறித்தும் முதல்வா் யோகி கேட்டறிந்தாா்.

மத்திய, மாநில அரசுகள் மாணவா்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளன. இத்தகைய திட்டங்களை தொடங்கியதற்காக, பிரதமா் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து கடிதங்களை எழுதுமாறு மாணவா்களிடம் கேட்டுக்கொண்டாா்.

போட்டித் தோ்வுகளுக்கு பயிற்சி வழங்குவதற்காக மாநில அரசு தொடங்கியுள்ள திட்டம் குறித்தும் முதல்வா் விளக்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.