அக்னிபத் திட்டம்: ராஜஸ்தானில் ஜூன் 27-ல் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் அக்னிபத் திட்டத்திற்கு எதிராக ஜூன் 27ஆம் தேதி ராஜஸ்தான் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளனர். 
அக்னிபத் திட்டம்: ராஜஸ்தானில் ஜூன் 27-ல் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் அக்னிபத் திட்டத்திற்கு எதிராக ஜூன் 27ஆம் தேதி ராஜஸ்தான் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளனர். 

இந்திய ராணுவத்தில் 4 ஆண்டுகளுக்கு இளைஞர்களை ஒப்பந்த அடிப்படையில் சேர்ப்பதற்கு அக்னிபத் என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. 

இந்த திட்டத்திற்கு வட மாநிலங்களில் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டுள்ளதோடு, காங்கிரஸ் கட்சியினர் இந்த திட்டத்தை எதிர்த்துத் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், அக்னிபத் திட்டத்திற்கு எதிராக போராடும் இளைஞர்களின் குரல் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரை சென்றடைவதை உறுதி செய்ய நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம் என்று மாநிலக் கட்சித் தலைவர் கோவிந்த் சிங் தோதாஸ்ரா செய்தியாளர்களிடம் கூறினார். 

ஜூன் 27-ம் தேதி மாநிலம் முழுவதும் மற்றும் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் காங்கிரஸ் போராட்டம் நடத்தும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com