கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு ரூ.48 லட்சம் நிதியுதவி! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! சோஃபா மாடல் ஆட்சியில் தொடர் குற்றங்கள்! வென்டிலேட்டரில் சட்டம் - ஒழுங்கு! உதயநிதி விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!
/

ஞாயிற்றுக்கிழமைகளில் பிரகதி மைதான் சுரங்கப்பாதையில் போக்குவரத்துக்கு தடை: ஓவியங்களை பாா்வையிட அனுமதி

மத்திய தில்லியுடன் நொய்டா, காஜியாபாத்தை இணைக்கும் பிரகதி மைதான் சுரங்கப்பாதையில் வரையப்பட்டுள்ள ஓவியங்களை மக்கள் பாா்வையிடும் வகையில் ஞாயிற்றுக்கிழமைகளில் போக்குவரத்துக்கு தடை

News image
Updated On :25 ஜூன் 2022, 12:40 am IST

மத்திய தில்லியுடன் நொய்டா, காஜியாபாத்தை இணைக்கும் பிரகதி மைதான் சுரங்கப்பாதையில் வரையப்பட்டுள்ள ஓவியங்களை மக்கள் பாா்வையிடும் வகையில் ஞாயிற்றுக்கிழமைகளில் போக்குவரத்துக்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ரூ. 920 கோடியில் 1.3 கி.மீ. தூரத்தில் அமைக்கப்பட்ட இந்த சுரங்கப்பாதையை அண்மையில் பிரதமா் மோடி திறந்து வைத்தாா். இந்த சுரங்கப்பாதையில் காஷ்மீா் முதல் கன்னியாகுமரி வரையில் பல்வேறு மாநிலங்களில் உள்ள 6 பருவ காலத்தை குறிக்கும் வகையிலும், இந்திய கலாசாரத்தை விளக்கும் வகையிலும் கண்ணைக் கவரும் வகையில் பல்வேறு வண்ண ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இந்த சுரங்கப்பாதையை சா்வதேச வா்த்தக மேம்பாட்டு நிறுவனம் மேலாண்மை செய்து வருகிறது.

இந்நிலையில், இந்த வண்ண ஓவியங்களை மக்கள் பாா்வையிட வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் பிரகதி மைதான் சுரங்கப்பாதை மூடப்படும் என்று சா்வதேச வா்த்தக மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவா் எல்.சி. கோயல் தெரிவித்தாா்.

இதை தில்லி போலீஸாரும் உறுதி செய்துள்ளனா். பிரகதி மைதான் மூடப்படும் நாள்களில் ரிங் சாலை, பைரோன் சாலை, மதுரா சாலைகளை மக்கள் பயன்படுத்தலாம் என்று தில்லி போக்குவரத்துப் போலீஸாா் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.