குஜராத்தில் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர்களாக சேருமாறு மாணவிகளுக்கு அழைப்பு விடுத்த கல்லூரி முதல்வரால் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
பாவ் நகரில் உள்ள ஸ்ரீமதி என்.சி.காந்தி மற்றும் பி.வி.காந்தி கலை மற்றும் வணிகக் கல்லூரியில் ஜூன் 24 அன்று கல்லூரியின் முதல்வர் ரஞ்சன்பென் கோஹில் சுற்றறிக்கை ஒன்றை கல்லூரியில் வெளியிட்டார்.
அதில், முனிசிபல் கார்ப்பரேஷன் பகுதியில் வசிப்பவர்கள் பாஜவில் உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என்பதால், மாணவிகள் பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களைக் கொண்டு வரவேண்டும்.
இதையும் வாசிக்கலாம்| ‘அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக மாட்டேன்’: சஞ்சய் ரெளத்
மேலும், தேர்தல் உறுப்பினர்களான பிறகு மாணவிகள் கல்லூரி வளாகத்திற்குள் தங்கள் தனிப்பட்ட கைப்பேசிகளை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.
இந்த சுற்றறிக்கை மாணவிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக மாணவிகள் கல்லூரி அறக்கட்டளையிடம் புகார் அளித்தனர். மேலும், இந்த சுற்றறிக்கை அரசியல் எதிர்க்கட்சிகளுக்கிடையே பெரும் சர்ச்சையையும், விமர்சனத்தையும் ஏற்படுத்தியது.
இதையடுத்து கல்லூரி அறங்காவலர்கள் உடனடியாக ஒரு கூட்டத்தைக் கூட்டி முதல்வரிடம் இதுதொடர்பாக கேட்டறிந்தனர். இதையடுத்து, முதல்வர் பதவியை ராஜினாமா செய்யும்படி அறங்காவலர் குழு தலைவர் தீரன் வைஷ்ணவ் கூறினார்.
1951இல் ஸ்ரீமதி என்.சி.காந்தி மற்றும் பி.வி.காந்தி கலை மற்றும் வணிகக் கல்லூரி நிறுவப்பட்டது. இதன் ஒரே குறிக்கோள் பெண் குழந்தைகளுக்குக் கல்வி வழங்குவது, அவர்களுக்கு கலாசார மற்றும் உடற்கல்வி வழங்குதல், போட்டி உலகிற்கு அவர்களை தயார்ப்படுத்துவது மட்டுமே. கல்லூரி வளாகத்தில் அரசியல் செயல்பாடுகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதது, எனவே பொறுப்பு முதல்வர் ராஜினாமா செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.
மாநிலத்தில் மாணவர் சங்கங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், கல்லூரி வளாகத்தில் மாணவர் தேர்தல்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்று அவர் கூறினார்.
மேலும், முதல்வர் மட்டுமல்ல, அறங்காவலரும் தண்டிக்கப்பட வேண்டும் என்று இந்தியத் தேசிய மாணவர் சங்க (என்எஸ்யுஐ) தலைவர் கிரிராஜ்சிங் வாலா கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அடுத்த 3 மணி நேரத்துக்கு 19 மாவட்டங்களில் மழை!

புல்வாமா தாக்குதல் நடத்திய பயங்கரவாதி மர்ம மரணம்!
வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்

நரசிம்மர் ஜெயந்தி: பூவரசன்குப்பம்லட்சுமி நரசிம்மர் கோயிலில் சிறப்பு வழிபாடு!
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


