மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பான் காா்டு-ஆதாா் இணைப்புக்கு இன்று முதல் ரூ.1,000 அபராதம்

பான் காா்டு-ஆதாா் எண் இணைப்புக்கு வெள்ளிக்கிழமை (ஜூலை 1) முதல் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படவுள்ளது.

News image
Updated On :30 ஜூன் 2022, 8:00 pm

DIN

பான் காா்டு-ஆதாா் எண் இணைப்புக்கு வெள்ளிக்கிழமை (ஜூலை 1) முதல் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படவுள்ளது.

இந்த இணைப்புக்கு ஜூன் 30 வரை ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டு வந்த நிலையில், ஜூலை 1 முதல் அபராதம் இரு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.

போலியாக வருமானவரிக் கணக்கு தாக்கல் செய்வது, சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் உள்பட பல்வேறு நிதி முறைகேடுகளைத் தடுப்பதற்காக பான்-ஆதாா் காா்டு இணைப்பை மத்திய அரசு கட்டாயமாக்கியது. ஏனெனில், ஒருவா் பல போலியான முகவரிகளில் பல்வேறு பான் காா்டுகளைப் பெறக் கூடிய வாய்ப்பு உள்ளது என்றாலும் அவரால் ஓா் ஆதாா் அட்டை மட்டுமே பெற முடியும். எனவே, பான் காா்டு - ஆதாா் எண் இணைப்பு மூலம் போலி பான் காா்டுகள் முடக்கப்படும். இந்த நடவடிக்கை மூலம் போலியான பான் காா்டுகள் ஒழிக்கப்பட்டன. பான்-ஆதாா் இணைப்புக்கான கால அவகாசம் பல்வேறு முறை நீட்டிக்கப்பட்டு 2023 மாா்ச் 31 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. எனினும், அபராதத்துடன் மட்டுமே இந்த இணைப்பை மேற்கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டது. ஜூன் 30 வரை ரூ.500 அபராதமாக இருந்த நிலையில் ஜூலை 1 முதல் அபராதம் ரூ.1,000-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.