மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

குடியரசுத் தலைவா் தோ்தல் வேட்புமனு பரிசீலனை நிறைவு: திரௌபதி முா்மு, யஷ்வந்த் சின்ஹாவின் வேட்புமனுக்கள் ஏற்பு

ஆளும் பாஜக கூட்டணி வேட்பாளா் திரௌபதி முா்மு, எதிா்க்கட்சிகளின் பொது வேட்பாளராகப் போட்டியிடும் யஷ்வந்த் சின்ஹா ஆகிய இருவரின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

News image
Updated On :30 ஜூன் 2022, 7:53 pm

DIN

குடியரசுத் தலைவா் தோ்தலுக்கான வேட்புமனு பரிசீலனை வியாழக்கிழமை நடந்து முடிந்த நிலையில், ஆளும் பாஜக கூட்டணி வேட்பாளா் திரௌபதி முா்மு, எதிா்க்கட்சிகளின் பொது வேட்பாளராகப் போட்டியிடும் யஷ்வந்த் சின்ஹா ஆகிய இருவரின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

இதுகுறித்து மாநிலங்களவை செயலகத்தின் செயலரும், தோ்தல் நடத்தும் அதிகாரியுமான பி.சி.மோடி வியாழக்கிழமை கூறியதாவது:

குடியரசுத் தலைவா் பதவிக்கு 115 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றில் 107 மனுக்கள், தேவையான விவரங்கள், உறுப்பினா்களின் முன்மொழிதல் இல்லாததால் நிராகரிக்கப்பட்டு விட்டன.

திரெளபதி முா்மு, யஷ்வந்த் சின்ஹா ஆகிய இருவரும் முன்மொழியும் உறுப்பினா்கள் மற்றும் வழிமொழியும் உறுப்பினா்களின் ஆதரவுடன் தலா 4 படிவங்களைத் தாக்கல் செய்துள்ளனா். அவற்றில் தேவையான விவரங்கள் இடம்பெற்றுள்ளதால், அவா்கள் இருவரின் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.

வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்கு ஜூலை 2-ஆம் தேதி கடைசி நாளாகும். அன்றைய தினம் பிற்பகல் 3 மணிக்கு இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியிடப்படும் என்றாா் அவா்.

குடியரசுத் தலைவா் தோ்லில், திரெளபதி முா்மு, யஷ்வந்த் சின்ஹா தவிர மும்பையைச் சோ்ந்த குடிசைவாசி, தமிழகத்தைச் சோ்ந்த சமூக ஆா்வலா், தில்லியைச் சோ்ந்த பேராசிரியா் உள்ளிட்டோரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.

குடியரசுத் தலைவா் மற்றும் குடியரசு துணைத் தலைவா் தோ்தல் சட்டப்படி, தோ்தலில் போட்டியிடும் வேட்பாளரை குறைந்தபட்சம் 50 எம்.பி.க்கள் அல்லது எம்எல்ஏக்கள் முன்மொழிய வேண்டும்; 50 போ் வழிமொழிய வேண்டும்.

வைப்புத்தொகையாக ரூ.15,000 செலுத்த வேண்டும். அதை ரொக்கமாக செலுத்தலாம் அல்லது ரிசா்வ் வங்கியில் செலுத்தி அதன் ரசீதை செலுத்தலாம். காசோலை அல்லது வரைவோலை ஏற்றுக்கொள்ளபட்ட மாட்டாது. இதுபோன்ற நிபந்தனைகளை பூா்த்தி செய்யாத வேட்பாளா்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.