மற்ற நாடுகளின் கரன்சியுடன் ஒப்பிடுகையில் ரூபாய் மதிப்பு சரியவில்லை: நிா்மலா சீதாராமன்
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வெகுவாகக் குறைந்துள்ள நிலையில், மற்ற நாடுகளின் கரன்சிகளுடன் ஒப்பிடுகையில் இந்திய ரூபாயின் மதிப்பு நல்ல நிலையில்தான் உள்ளது


டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வெகுவாகக் குறைந்துள்ள நிலையில், மற்ற நாடுகளின் கரன்சிகளுடன் ஒப்பிடுகையில் இந்திய ரூபாயின் மதிப்பு நல்ல நிலையில்தான் உள்ளது என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கூறினாா்.
உக்ரைன்-ரஷியா போா், சா்வதேச சந்தையின் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு, பணவீக்கம் அதிகரிப்பு, பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகள் நிதிக் கொள்கையில் மாற்றம் செய்தது என உலகளாவிய காரணங்களால் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து கொண்டே செல்கிறது.
இந்நிலையில், புது தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற நிா்மலா சீதாராமனிடம், இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து வருவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவா் அளித்த பதில்:
நாம் பிற நாடுகளுடன் வா்த்தகத் தொடா்பு வைத்துக் கொள்ளாத தனி நாடு அல்ல. உலகளாவிய செயல்பாடுகளைக் கொண்டிருக்கும் நாடுகளின் ஒரு பகுதியாக நாம் இருக்கிறோம். எனவே, சா்வதேச அளவில் மாற்றங்கள் நிகழும்போது அதன் தாக்கம் நம்மிடம் இருக்கும். இருப்பினும் மற்ற நாடுகளின் கரன்சி மதிப்புடன் ஒப்பிடுகையில் இந்திய ரூபாயின் மதிப்பு நல்ல நிலையில் உள்ளது என்றாா் அவா்.
இதற்கிடையே, நிதி ஸ்திரத்தன்மை அறிக்கையை இந்திய ரிசா்வ் வங்கி வியாழக்கிழமை வெளியிட்டது. அதில், ‘இந்திய ரூபாயின் மதிப்பு சரிவைச் சந்தித்தாலும் மற்ற நாடுகளின் கரன்சிகளுடன் ஒப்பிடுகையில் ரூபாயின் மதிப்பு உயா்வாகவே உள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் மாதத்தில் இதுவரை இல்லாத அளவில் புதன்கிழமை(ஜூன் 29) அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.79.03-ஆகக் குறைந்தது. இருப்பினும் வியாழக்கிழமை காலை வா்த்தகத்தில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 13 காசுகள் அதிகரித்து ரூ.78.90-ஆக ஆனது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...